minnambalam.com - Kavi : சென்னை, கிண்டியில் செயல்பட்டு வரும் அண்ணா பல்கலைக் கழகத்தில் கடந்த 23ஆம் தேதி இரவு மாணவி ஒருவர் தனது காதலரான சீனியர் மாணவருடன் தனியாக இருந்தபோது, அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர் இருவரையும் வீடியோ எடுத்து மிரட்டி, அந்த மாணவியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
அங்கு என்னதான் நடந்தது? கைதான ஞானசேகரன் யார்? என்ற தீவிர விசாரணையில் இறங்கினோம்.
கடந்த டிசம்பர் 24 (செவ்வாய் கிழமை) காலையில் காவல்துறை கட்டுப்பாட்டு அறை எண்-100க்கு ஒரு அழைப்பு வந்தது.
அதில் பேசியவர் “டிசம்பர் 23ஆம் தேதி இரவு அண்ணா பல்கலை கழக வளாகத்துக்கு வந்த அடையாளம் தெரியாத நபர் என்னை மிரட்டி நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு சென்றுவிட்டார்” என்று புகார் அளித்தார்.
இந்த புகாரின் விவரம், அழைப்பு வந்த நம்பர், அந்த மாணவியின் பெயர் ஆகிய விவரங்கள் மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகம் மூலமாக கோட்டூர்புரம் காவல்துறைக்கு தெரியப்படுத்தப்பட்டது.
பொதுவாக அவசர எண் 100-க்கு போன் செய்து புகார் கொடுத்தால், சம்பந்தபட்ட மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளருக்கோ அல்லது மாநகர காவல்துறை துணை ஆணையருக்கோ புகார் விவரங்கள் அனுப்பப்படும். அவர்கள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்துக்கு அனுப்பி வைப்பார்கள். இந்த புகாருக்கு சம்பந்தப்பட்ட காவல்நிலையம் என்ன நடவடிக்கை எடுத்தது என்ற தகவலை காவல்துறை தலைமைக்கு உடனடியாக அனுப்பி வைக்க வேண்டும்.
இதனால் கோட்டூர்புரம் உதவி ஆய்வாளர் அந்த மாணவியின் எண்ணிற்கு அழைத்து, ‘நான் கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் இருந்து எஸ்.ஐ பேசுகிறேன். உங்கள் புகார் சம்பந்தமாக சில விவரங்களை கேட்க வருகிறேன்” என்று கூறிவிட்டு 24ஆம் தேதி காலை 10 மணியளவில் அண்ணா பல்கலைக்கு சென்றார்.
அங்கு, மாணவி படிக்கும் துறையின் எச்.ஓ.டி, பேராசிரியர்களிடம் விசாரித்தார்.
‘மாணவர்கள் தேர்வு எழுதிக்கொண்டிருக்கிறார்கள். நீங்கள் மாலை வாருங்கள்… இல்லையென்றல் புகார் கொடுத்த மாணவியை வர சொல்கிறோம்’ என்று பேராசிரியர்களும் எச்.ஓ.டியும் உதவி ஆய்வாளரிடம் கூறியிருக்கிறார்கள்.
இதற்கிடையில், அண்ணா பல்கலைக் கழக மாணவி சம்பந்தப்பட்ட விவகாரம் என்பதால் போலீஸ் உயரதிகாரிகள் எல்லோரையும் அலர்ட் செய்தனர். இதனால் இன்ஸ்பெக்டர், உதவி ஆணையர், துணை ஆணையர் ஆகியோரும் விசாரணையில் இறங்கினர்.
மாலையில் அந்த மாணவிடம் போலீசார் துருவி துருவி விசாரித்த போது, “அவன் என்னை மிரட்டி கட்டிப்பிடித்தான். பிறகு எனது செல்போன் நம்பர், பெற்றோர் செல்போன் நம்பர் மற்றும் என்னிடம் இருந்த தங்க நகைகளை பறித்துக்கொண்டு போய்விட்டான்” என்று அழுதபடி சொல்லியுள்ளார்.
தொடர்ந்து அந்த மாணவியிடம் பெண் போலீஸ் அதிகாரி ஒருவர் விசாரித்தார். அவரிடம் ’செயின் பறிப்பு மட்டுமல்ல, என்னை செக்ஸ் செய்தும் கொடுமைபடுத்தினான் என்று கதறி அழுதுள்ளார். இதையடுத்து கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
அன்று இரவு முதலே குற்றவாளி எவன்? என கண்டுபிடிக்க போலீசார் தீவிர வேட்டையில் இறங்கினர். அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில், அந்த மாணவி குறிப்பிட்ட இடத்தின் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை போலீசார் விடிய விடிய ஆய்வு செய்தனர். அதில் உள்ள சிலரை மாணவியிடம் காட்டியபோது அவர் ஒருவனை, இவன்தான் என்றார்.
அவனை போலீசார் வெறிகொண்டு தேடியபோது அவன் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வருபவன் என்பதும் கோட்டூர்புரத்தில் பிறந்து வளர்ந்த ஞானசேகரன்தான் என்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
மீடியாக்கள் மூலம், ‘அண்ணா பல்கலை கழக மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார்’ என்ற செய்தி தீயாக பரவியதும், சில லோக்கல் திமுக பிரமுகர்களின் தலையீட்டை மீறி ஞானசேகரனை உடனடியாக கைது செய்தனர்.
போலீஸ் பிடியில் இருந்த ஞானசேகரன் சற்று கோபமாக ‘ஏன் சார் என்னை பிடிக்கிறீங்க… இருங்க தலைவர்ட்ட பேசிட்டு வர்றேன்’ என்று சொல்ல,
போலீசார் யார் உன் தலைவர்… யாரா இருந்தாலும் ஸ்டேஷன் போய் பேசிக்கலாம்” என்றதும், ஞானசேகரன் ‘சில திமுக பிரமுகர்களின் பெயரை சொல்ல டென்ஷன் ஆன போலீசார், எதுவாக இருந்தாலும் அங்க போய் பேசிக்கலாம்… என்று ஸ்டேசனுக்கு ஞானசேகரனை அழைத்துச் சென்றனர்.
ஸ்டேஷனில் வைத்து, கல்லூரி மாணவியை என்ன செய்தாய் என்று போலீசார் கேட்க, ‘எனக்கு எதுவும் தெரியாது… நான் அங்கு போகவில்லை” என்று மறுத்திருக்கிறான். அவனின் செல்போனில் இருந்த வீடியோக்களை பார்த்த பிறகு, அவர்கள் பாணியில் அவனை விசாரித்தனர்.
அப்போது,“சார்.. அந்த பக்கமாக போனேன்… அங்க காதலர்கள் உட்கார்ந்திருந்தார்கள்… என்னை பார்த்ததும் அந்த பையன் ஓடிட்டான்… நான் எந்த தப்பும் பண்ணல… முத்தம் மட்டும் கொடுத்துட்டு வந்துவிட்டேன்” மீண்டும் மீண்டும் இதையே சொல்லியிருக்கிறான்.
ஞானசேகரனைப் பற்றி மயிலாப்பூர் துணை ஆணையர் அலுவலகத்தில் விசாரித்தோம்.
“ 2010ல் இருந்து செயின் பறிப்பு, திருட்டு உள்ளிட்ட தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்துள்ளான், இதற்குமுன் கானத்தூர் காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட மாயாஜால் மாலில் ஒரு பெண்ணிடம் சில்மிசம் செய்து, செயின் பறிக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டிருக்கிறான்.
இதுபோல் இவன் மீது 14 வழக்குகள் உள்ளன. முதல்முறையாக பாலியல் வன்கொடுமை வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஐந்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தண்டனை கிடைத்துள்ளது.
தண்டனை என்பது பெரியளவில் இல்லாமல், ‘வெறும் அபராதம்’ மட்டும் செலுத்தினால் போது என்றளவில் சிறிய தண்டனையாக இருந்ததால் தொடர்ந்து தப்பித்து வந்தான்.
இவனால் பாதிக்கப்பட்ட பெண்கள் சமூகத்திற்கு பயந்து உண்மையை சொல்லாமல் இருந்திருக்கலாம்” என்றனர்.
அடையாறு போலீசாரிடம் ஞானசேகரன் பிரியாணி கடை பற்றி விசாரித்தோம்.
அடையாறு பாலத்தின் கீழ் ரன்ஸ் ஹோட்டலுக்கு எதிர்புறம் நடைபாதையில், மக்களுக்கு தொந்தரவு தரும் வகையில், ஒரு பிரியாணி கடையை குற்றவாளி ஞானசேகரன் வைத்திருக்க எப்படி அனுமதித்தீர்கள் என்று கேட்டோம்.
“பொதுமக்கள் ஏராளமான புகார்களை முதல்வர் அலுவலகத்துக்கு மெயில் மூலம் அனுப்பினர். அதைதொடர்ந்து கடையை அகற்றினோம். உடனே ஏகப்பட்ட பிரஷ்ஷர் எங்களுக்கு. அமைச்சர், கார்பரேஷன் சேர்மேன், பகுதி செயலாளர்கள் பெயர்களை சொல்லி புகார் கொடுத்த மக்களையே மிரட்டி அடித்திருக்கிறான்.
அவன் முக்கியமான சிலருக்கு பிரியாணி அனுப்புவான். அவன் போடக்கூடிய டி-ஷர்ட், பேண்ட் எல்லாம் காஸ்ட்லியாக இருக்கும்.
பெண்களைக் குறிவைத்து குற்றம் செய்து வந்த இவனை தொடர்ந்து கண்காணித்து குண்டர் சட்டத்தில் நாங்கள் அடைத்திருந்தால் இன்று இதுபோன்ற கொடுமை நடந்திருக்காது” என்றார்கள் வெளிப்படையாக.
….
வணங்காமுடி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக