திங்கள், 5 செப்டம்பர், 2022

விபத்தில் உயிரிழந்த .டாட்டா நிறுவன முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி.. பின் சீட்டில் இருந்தும் பெல்ட் அணியாமயே ....?

tamil.oneindia.com  -  Shyamsundar :  மும்பை: டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி பலியான நிலையில், அவரின் கார் விபத்து பற்றிய கூடுதல் விவரங்கள் தற்போது வெளியாகி உள்ளன.
டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்திரி கார் விபத்தில் நேற்று பலியானார்.
இந்திய பிஸ்னஸ் உலகையே இந்த சம்பவம் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி உள்ளது.
டாடா குடும்பத்தை சாராத சைரஸ் மிஸ்திரி அந்த நிறுவனத்தில் வளர்ந்து அதன் தலைவராக பரிணமித்து இந்தியாவில் பலருக்கும் ரோல் மாடலாக திகழ்ந்தார்.
2012 - 2016 வரை இந்த நிறுவனத்தின் தலைவராக சைரஸ் மிஸ்திரி பணியாற்றி வந்தார். இந்த நிலையில்தான் நேற்று குஜராத்தில் இருந்து மும்பைக்கு இவர் காரில் சென்று கொண்டு இருந்த போது விபத்தில் சிக்கினார்.
இவரின் விபத்து பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ள நிலையில், முன் சீட்டில் இருந்த டிரைவர் விபத்தில் பலியாகாத நிலையில், பின் சீட்டில் அமர்ந்த சைரஸ் மிஸ்திரி பலியானது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கான விடைகள், விபத்திற்கான காரணங்கள் குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன.

சைரஸ் மிஸ்திரி
சைரஸ் மிஸ்திரி சென்ற கார் Mercedes-Benz GLC SUV கார் ஆகும். நேற்று பால்கார் என்ற பகுதியில் செக் போஸ்ட் தாண்டிய பின் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. சாலை தடுப்பில் மோதி இந்த கார் விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. கார் மிக வேகமாக சென்ற காரணத்தால் அது விபத்துக்கு உள்ளாகி இருக்கிறது. உதாரணமாக கடைசி 20 கிலோ மீட்டர் தூரத்தை இந்த கார் வெறும் 9 நிமிடத்தில் தாண்டி இருக்கிறது. அந்த அளவிற்கு வேகமாக சென்றது சிசிடிவி காட்சி மூலம் தெரிய வந்துள்ளது.

விபத்து
அதாவது ஒரு நிமிடத்திற்கு 2.2 கிலோ மீட்டர் தூரம். மணிக்கு சுமார் 132 கிலோ மீட்டர் வேகத்தில் கார் சென்றுள்ளது. சரியாக நேற்று பிற்பகல் 2.30 மணிக்கு இந்த விபத்து ஏற்பட்டது. முழுக்க முழுக்க டிரைவர் தவறாக கணித்த காரணத்தால்தான் இந்த விபத்து ஏற்பட்டு இருக்கும் என்று கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பாக வெளியாகி இருக்கும் சில தகவல்கள் பின்வருமாறு,
1 . சைரஸ் மிஸ்திரி மாற்று ஜஹாங்கிர் தின்ஷா இரண்டு பேருமே மருத்துவமனைக்கு வரும் போது அவர்கள் உடலில் உயிர் இல்லை.

2. சைரஸ் மிஸ்திரி தலையில் காயம் இருந்தது. அவருக்கு கால் எலும்புகளும் உடைந்து இருந்தன.
என்ன நடந்தது

என்ன நடந்தது

3 . போன இரண்டு பேருமே சீட் பெல்ட் அணியவில்லை. முன் சீட்டில் இருந்தவர்கள் சீட் பெல்ட் அணிந்து இருந்ததால் அவர்கள் தப்பித்துக்கொண்டனர்.

4. இந்த காரை ஓட்டியது அன்ஹித என்ற பெண். இவர் மருத்துவர். பாலத்தில் இருந்த சாலை தடுப்பை இடித்து உள்ளார்.

5. இந்த கார் மிக வேகமாக சென்றதாக அந்த பகுதியில் இருந்து மக்கள் தெரிவித்துள்ளனர்.

பின் சீட்
6. அந்த பெண்ணும், அவரின் கணவரும் முன் சீட்டில் இருந்தனர். இரண்டு பேரும் காயங்களுடன் உயிர் தப்பித்தனர்.

7. முன் சீட்டில் இருந்த ஏர்பேக் இரண்டு பேரையும் காப்பாற்றி உள்ளது.

8. பின் பக்க காரில் எந்த பாதிப்பும் இல்லாத நிலையில், சைரஸ் சீட் பெல்ட் அணியாததே மரணத்திற்கு காரணம் என்று தெரிய வந்துள்ளது.

கருத்துகள் இல்லை: