புதன், 7 செப்டம்பர், 2022

சமஸ்கிருதம் ஒரு மொழியே அல்ல! - சாத்தூர் சேகரனார்

May be an image of 1 person

சாத்தூர் சேகரனார் :  சமஸ்கிருதம் உலகமொழிகளின் தாய் என்றும் இந்திய மொழிகளின் தாய் என்றும் சான்றுகள் இன்றி உளறி வந்தனர்.
1947க்கு முன் பிராமணப் பண்டிதர்கள் தம் பதவியாலும் பவிசாலும் மாறி மாறிக் கூறி வந்தாலும் எப்படியோ இந்தப் பொய்களை காத்து வந்தனர்.
1947 இந்தியாவிற்கு மட்டும் விடுதலை வரவில்லை. இந்திய மொழிகளுக்கும் விடுதலை கிடைத்தது.
ஒவ்வொரு மொழியின் மொழி அறிஞர்களும் எந்தவிதமான கட்டுப்பாடும் இல்லாமல், தத்தம் மொழியை முழுமையாக ஆராய முடிந்தது.
இதன் பலனாக பல அதிர்ச்சி அளிக்கும் உண்மைகள் வெளிவரத் தொடங்கின.
(அ) சமஸ்கிருதம் வெறும் பாவை மொழி
(ஆ) இந்தியாவின் உள்ளும் சரி இந்தியாவின் வெளியிலும் சரி ஒருநாள் ஒருபொழுது கூட பேசப்படாத மொழி


(இ) சமசுகிருதம் இந்தியாவின் எந்தமொழிக்கும் – குறிப்பாக வட இந்திய மொழிகளுக்குக் கூட தாயல்ல
(ஈ) சமசுகிருதத்திற்கு சொந்த எழுத்து கூட கிடையாது. தமிழ் இலக்கியத்தில் வரும் தொடர். "பார்ப்பன மகனே பார்பன மகனே…. எழுதாக்கற்பு......"
(உ) எழுதில்லாத மொழி எப்படி மாபெரும் இலக்கியங்களை எழுத முடிந்தது?
15ம் நூற்றாண்டில் சாயனர் என்னும் விசயநகர அமைச்சர்,  அரச தயவு பெற்று பிராகிருத மற்றும் தென்னிந்திய இலக்கியங்களை சமசுகிருதத்தில் மொழி பெயர்த்துக் கொண்டு மூல நூல்களை அழித்து விட்டார்.
(ஊ) சுருதி – காதால் கேட்கப்படுவது, ஸ்மிருதி வாயால் உச்சரிக்கப்படுவது.
இந்த இருநிலைகளில் மட்டுமே இயக்கி வந்ததது சமசுகிருத மொழி – என்ற உண்மையும் அண்மைக் கால ஆய்வால் தெரிய வந்துள்ளது.
இப்போதைய எழுத்து வட இந்தியத்தமிழர் பயன்படுத்தி வந்த நகரி எழுத்துக்கள்தாம்.
(எ) சமசுகிருதம் ஆரியர்களுடைய மொழியுமல்ல பிராமணர்களுடைய மொழியுமல்ல. ஆரியர்கள் பேசி வந்த மொழி ரோமானி.
இது நாடோடி மொழி. நரிக்குறவர் மொழி. ஜிப்சிமொழி.
இதற்கும் சமசுகிருதத்திற்கும் எள்முனை அளவுகூட தொடர்பில்லை.
(ஏ) அப்படியானால் சமசுகிருதம் யாருடைய மொழி? யார் செய்த மொழி?
 வடஇந்தியாவில் தமிழுக்கு – முதல்மொழி என்ற கருத்தில் பிராகிருதம் என்ற பெயர் ஏற்பட்டது.
சமசுகிருதம் என்றால் செம்மையாகச் செய்யப்பட்டது என்று பொருள்.
தென்னிந்திய தமிழுக்கும் சற்று திரிந்துபோன வடஇந்தியத் தமிழுக்கும் இணைப்பு ஏற்படுத்த பாண்டிய, பல்லவ, குப்த மன்னர்கள் கி.பி6-ஆம் நூற்றாண்டுகளில் முயன்றனர்.
இப்பொறுப்பை அறியாமையாலும் அவசரத்தாலும் பிராமணர் வசம் ஒப்படைத்தனர். சுயநல மிக்க அவர்கள் இந்த அரிய முயற்சியைச் சீரழித்து விட்டனர்.
(ஐ) இந்த மாபெரும் உண்மைகளில் ஒரு சிலவற்றைக் கூட உணர்ந்திராத வட இந்திய மொழி அறிஞர்கள் தென்னிந்த மொழி அறிஞர்கள் – சமசுகிருதம் ஓர் மாபெரும் மொழி என்று கற்பனையாகக் கருதிக் கொண்டு பல்வேறு தவறுகளை உண்டாக்கி விட்டனர்.
நேற்றைய தமிழறிஞர்களும் சரி, இன்றைய தமிழறிஞர்களும் சரி, மேலே சுட்டிய பல உண்மைகளை உணராதவராக இருக்கின்றனர்.
இதனால் தவறுமேல் தவறுகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றனர்.
இதன் பலனாக இவை அயற்சொற்கள், இவை தமிழல்ல, போன்ற நூல்கள் உருவாகிவிட்டன.
பாவம், தமிழ் கூடத் தெரியாத தமிழ் அறிஞர்கள்.
இவ்வளவு நீண்ட முன்னுரைக்குப் பின் சமசுகிருத வேர்ச் சொற்களை ஆராய்வது எளிது.
பாவாணர் கூறியபடி தமிழில் மட்டுமே உலகமொழிச் சொற்களுக்கு உரியவேர்களைக் காணமுடியும்.
-நன்றி : தமிழறம்

கருத்துகள் இல்லை: