ஞாயிறு, 4 செப்டம்பர், 2022

சிலிண்டரில் மோடி படம் - நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுத்த தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி

தினத்தந்தி : ஐதராபாத்:  தெலுங்கான மாநிலத்தின் ஜஹீராபாத் பாராளுமன்ற தொகுதியில் நேற்று நடைபெற்ற மத்திய அரசின் நலத்திட்ட நிகழ்ச்சியில் மத்திய நிதிமந்திரி நிர்மலா சீதாராமன் பங்கேற்றார். பின்னர் அவர் அங்குள்ள ரேஷன் கடையை ஆய்வு செய்தார்.
அப்போது மத்திய அரசு அதிக மானியம் கொடுக்கும்போது, ரேஷன் கடைகளில் பிரதமர் நரேந்திர மோடியின் புகைப்படம் இல்லாதது ஏன் என மாவட்ட ஆட்சியரை கடிந்து கொண்டார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது.
இந்நிலையில், நிதி மந்திரி நிர்மலா சீதாராமனுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியினர் கியாஸ் சிலிண்டரில் பிரதமர் மோடியின் படத்தை ஒட்டியுள்ளனர். அதில் கியாஸ் விலையும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வீடியோவும் வைரலாக பரவி வருகிறது.இதுதொடர்பான வீடியோவை தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் நிர்வாகி கிரிஷன் பகிர்ந்திருப்பதோடு, பிரதமர் மோடியின் புகைப்படத்தைத் தானே கேட்டீர்கள், இங்கே இருக்கிறது என பதிவிட்டுள்ளார். இது தற்போது வைரலாகப் பரவி வருகிறது

கருத்துகள் இல்லை: