ஞாயிறு, 12 டிசம்பர், 2021

கோவாவில் ஆட்சியை பிடிக்க திரிணாமுல் காங்கிரஸ் தீவிரம் குடும்ப தலைவிகளுக்கு மாதம் 5000 ரூபாய் வாக்குறுதி

 தினத்தந்தி : பனாஜி, கோவாவில் அடுத்த ஆண்டு (2022) தொடக்கத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. இதற்காக திரிணாமுல் காங்கிரஸ் கட்சி தீவிர களப்பணியாற்றி வருகிறது.
கட்சியின் கோவா மாநில பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு உள்ள மஹூவா மொய்த்ரா கட்சி நிர்வாகிகளுடன் தொடர்ந்து சந்திப்புகளை நடத்தி பணிகளை முடுக்கி விட்டு உள்ளார்.
இந்த தேர்தலில் மாநிலத்தில் ஆட்சியை பிடித்தால், குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.5 ஆயிரம் வழங்கப்படும் என மொய்த்ரா நேற்று அறிவித்தார்.
கிரிக லட்சுமி திட்டம் என பெயரிடப்பட்டு உள்ள இந்த திட்டத்தில், பயனாளிகளுக்கான அட்டைகள் விரைவில் வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


மாநில பா.ஜனதா அரசு வருமான உச்சவரம்பை நிர்ணயித்து 1.5 லட்சம் பேருக்கு வெறும் ரூ.1,500 மட்டும் வழங்கி வருவதாக கூறிய அவர், திரிணாமுல் காங்கிரஸ் கட்சி இந்த உச்சவரம்பை நீக்கி 3.5 லட்சம் பெண்களுக்கு வழங்கும் எனவும் உறுதியளித்தார்.

கருத்துகள் இல்லை: