வியாழன், 16 டிசம்பர், 2021

விந்தணு குறைபாடு.. உலகின் மொத்த பாதிப்பில் 25-30% இந்தியர்கள்!

May be an image of 2 people and text that says '34 ஆம் அமர்வு TEDUGNT 18 டிசம்பர் 2021 சனிக்கிழமை இரவு 8 மணி Zoom 873 262 560 கடவுச்சொல் இல்லை f LIVE குறைந்து வரும் குழந்தைப்பேறு: பேசப்படாத சூழல் காரணிகள் பேசுபொருள் தாமதமாகும் குழந்தைப்பேறு- தம்பதிகள் தவிர சூழலும் மிகப்பெரிய காரணம் என்பது தெரியுமா? குழந்தைப்பேறின்மை என்பது ஒரு குறையல்ல, பெரும்பாலும் குணப்படுத்தக்கூடிய நோய் என்பது தெரியுமா? ART எனப்படும் உதவிபெறும் இனப்பெருக்கத் தொழிநுட்பம்- தவறான புரிதல்களும், தெளிவான விளக்கங்களும். துறை பணர் டாக்டர் சூர்யா Consultant Obstetrician Gynaecologist & Fertility Specialist Laparoscopic Surgeon Nakshatra Men, Women & Fertility Clinic 5/336, Santhome Avenue, Okkiyampettai, OMR, Chennai- /seviunavu /seviunavu Sevikku Unavu Sevikku Unavu'

Vidhya Suresh  : Dr. Yogesh Choski. குஜராத் மாநிலத்தின் முதல் cyrobank உரிமையாளர். 1997இல் விந்தணு வங்கியை ராஜ்கோட் நகரில் துவங்கியது முதல், கடந்த பத்தாண்டுகளுக்கு முன்பு வரை தினமும், 20-30 வயது வரையுள்ள நல்ல ஆரோக்கியமான இளைஞர்கள் இவர் வங்கிமுன் வரிசையில் நிற்பார்கள். அவர்களிடமிருந்து பெறப்பட்டு மாநிலம் முழுவதும் பயணிக்கும் விந்தணுக்களில் 70% செறிவானவையாக இருக்கும்.  இன்று நிலைமை தலைகீழ். 70% விந்தணுக்கள் நிராகரிக்கும் நிலையில்தான் இருக்கின்றன” என்கிறார். விந்தணு குறைபாடு பிரச்சினையில் உலகின் மொத்த பாதிப்பை கணக்கெடுத்தோமேயானால், அதில் 25-30% இந்தியர்கள் என்கிறார் AIIMS மருத்துவமனையின் Dr. நீதா சிங். மக்கள்தொகையில் உலகின் இரண்டாவது இடத்திலிருக்கும் நாட்டில், மலட்டுத்தன்மை மிக முக்கியப் பிரச்சினையாக உருவெடுக்கும் முரணை எப்படி விளங்கிக்கொள்வது?.

    காலங்காலமாக பெண்ணை பழிச்சொல்லும் மனநிலை இன்றும் சமூகத்தில் மாறாத நிலையில், இந்த ஆராய்ச்சி முடிவுகளை இந்த ஆணாதிக்க சமூகம் எப்படி எதிர்க்கொள்ளும்?. மேலும், 8,10 வயதில் பெண்குழந்தைகள் பூப்பெய்துவது சகஜமாகிவிட்டாலும்,  கருவுறும் வயதில் அந்தப்பெண்கள் எதிர்க்கொள்ளும் பிரச்சினைகள் ஏராளம். ஆண்கள் மட்டுமல்ல,  பெண்களின் கருமுட்டை வளர்ச்சியிலும் பெரும் பின்னடைவு இருக்கிறது. இதற்கான காரணத்தை ஆராய்ந்தபோது இன்றைய வாழ்க்கைமுறையும், சூழலும் மிகப்பெரும் அச்சுறுத்தலாக முன்நின்றது.
       EDC- Endocryine Disrupting chemicals- ஹார்மோன்களின் செயல்பாட்டில் குறுக்கிடும் வேதிப்பொருட்களே இதற்கு காரணம் என்கிறது ICMR. (கோவிட் புண்ணியத்தில் அநேகருக்கு இந்தப் பெயர் பரிச்சயம் ஆகியிருக்கும்). பயிர்களுக்கு உபயோகப்படுத்தப்படும் அபாயகரமான பூச்சிக்கொல்லிகள், உணவுகளை பேக் செய்யப் பயன்படும் பிளாஸ்டிக்கில் இருக்கும் வேதிப்பொருட்கள் போன்றவை மிக முக்கிய காரணியென 2018 ஆம் ஆண்டில் கண்டறிந்திருக்கிறார் chettinad hospital and research institute ஐ சேர்ந்த டாக்டர். ருக்மிணி. பிளாஸ்டிக்கில் அடைத்து வரும் உணவுடன் கலந்து உள்ளே செல்லும் அந்த வேதிப்பொருட்கள், உயிரணு குறைபாட்டை மட்டுமல்ல, இளம் பெண்களுக்கு PCOS தொடங்கி, கேன்சர் வரை பல்வேறு உபாதைகளை தன்னுடனே அழைத்து வந்துவிடுகிறது.
              நகரங்கள் மட்டுமல்ல, கிராமங்களிலும் இந்தப்பிரச்சினை பரவலாக இருப்பதாக கவலை தெரிவிக்கிறது The Week இதழில் வெளிவந்த கட்டுரை. கடந்த இருபதாண்டுகளில் சூழல் மாசின் பலனை வெறும் காலநிலை மாறுதல், சுற்று சூழல் பாதிப்பு, தண்ணீர் பற்றாக்குறை என்ற அளவிலேயே நாம் புரிந்துக்கொண்டிருக்க, மனித குலத்தின் இனவிருத்தியே பாதிக்கப்பட்டிருக்கிறது என்பது அதிர்ச்சி தரும் ஆய்வு முடிவு.
     ஆக, குழந்தைப்பேறு தாமதத்திற்கு தம்பதிகளைத் தவிர சமூகமும், சூழலும் கூட ஒரு காரணமா?. அந்தப்புரிதல் இன்று படித்தவர்களிடையே கூட இருக்கிறதா?. முறையான புரிதல் இப்பிரச்சினையின் சுழலில் சிக்கிக்கொண்டிருக்கும் பெண்களுக்கு விமோசனம் அளிக்குமா?. பதின்வயதில் இருக்கும்  குழந்தைகளை இப்பிரச்சினைகளில் இருந்து பாதுகாக்க இயலுமா?. பெற்றோராக செய்ய வேண்டியவை என்ன?. நம் கேள்விகளுக்கான பதில்களுடன் செவிக்குணவு நிகழ்வின் 34 ஆம் அமர்வில் கலந்துரையாடவிருக்கிறார், குழந்தையின்மைக்கான சிறப்பு மருத்துவர் டாக்டர். P. சூர்யா. தாமதிக்கும் குழந்தைப்பேறு/ குழந்தையின்மை என்பது அநேகர் நினைப்பதுபோல குறைபாடில்லை, பெரும்பாலும் குணப்படுத்திவிடக்கூடிய நோய் என்று நம்பிக்கையூட்டுகிறார். பார்வையாளர்கள் நேரடியே கலந்துரையடி மருத்துவரிடம் சந்தேகங்களை கேட்டு தெளிவுபெற,  செவிக்குணவு நிகழ்வில் இணைய அழைக்கிறோம். நிகழ்வுக்கான சுட்டி முதல் கமெண்டில்.

கருத்துகள் இல்லை: