செவ்வாய், 14 டிசம்பர், 2021

கொரோனா முன்னெச்சரிக்கை.. கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை: தமிழ்நாடு அரசு உத்தரவு

 Rajkumar R -   Oneindia Tamil :  சென்னை: இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் ஓமிக்ரான் பரவி வரும் நிலையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழகத்தில் உள்ள கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு தமிழகத்தில் தொடர்ந்து குறைந்து வரும் நிலையில், கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு கட்டுப்பாடுகள் மற்றும் தளர்வுகளுடன் பல்வேறு கட்டங்களாக தொடர்ந்து நீட்டிக்கப்பட்டு வருகிறது. இந்தநிலையில் கடந்த மாதம் அறிவிக்கப்பட்ட ஊரடங்கு வரும் 15ம் தேதியுடன் நிறைவடைகிறது.


நாளுக்கு நாள் குறைந்து வரும் நிலையில் ஓமிக்ரான் பாதிப்பு அண்டை மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இதுவரை ஓமிக்ரான் இறப்புகள் இல்லை என கூறப்பட்டாலும் பாதிப்புகள் அதிகரித்து கூடாது என்பதற்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு செயல்படுத்தி வருகிறது.

 இந்த நிலையில் தமிழகத்தில் நேற்றைவிட இன்று கொரோனா பாதிப்பு குறைந்துள்ளது. தினசரி கொரோனா பாதிப்பு 671ல் இருந்து 657 ஆக குறைந்துள்ள நிலையில், கொரோனா சிகிச்சையில் 7,666 பேர் உள்ளனர் , கொரோனா தொற்றின் காரணமாக அரசு மருத்துவமனைகளில் 8 பேரும், தனியார் மருத்துவமனைகளில் 4 பேர் என 12 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதிகபட்சமாக சென்னையில் 114 பேருக்கும் ,கோவையில் 101 பேருக்கும், கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. டிசம்பர் 31வரை ஊரடங்கு நீட்டிப்பு டிசம்பர் 31வரை ஊரடங்கு நீட்டிப்பு இந்நிலையில் கடந்த தமிழகத்தின் கொரோனா ஊரடங்கு குறித்து முதல்வர் ஸ்டாலின் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய நிலையில், தமிழகத்தின் ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக அரசு அறிவித்துள்ளது.
அதன்படி ஓமிக்ரான் பரவலை கருத்தில் கொண்டு பண்டிகை காலங்களில் கூட்டம் கூடுவதை மக்கள் தவிர்க்க வேண்டும் எனவும் டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 ஆகிய தேதிகளில் தமிழகக் கடற்கரைகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு பொதுமக்களுக்கு அனுமதியில்லை என கூறப்பட்டுள்ளது.

 அனைத்து கல்லூரிகள் தொழிநுட்பக் கல்லூரிகள் சுழற்சி முறை ரத்து செய்யப்பட்டு அனைத்து கல்லூரிகள் தொழிநுட்பக் கல்லூரிகள் வழக்கமான நடைமுறை படி செயல்படும் எனவும் ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு களுக்கு சுழற்சி முறை இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசியல் கூட்டங்களுக்கு தடை அரசியல் கூட்டங்களுக்கு தடை ஆறு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை பள்ளிகளில் ஜனவரி 3ஆம் தேதி முதல் இயல்பு நடைமுறைப்படி செயல்படும் எனவும், அனைத்து நீச்சல் குளங்களுக்கு செயல்பட அனுமதிக்கப்படும் என தமிழக அரசு கூறியுள்ளது
சமுதாய கலாசார அரசியல் கூட்டங்கள் போன்ற பொது நிகழ்வுகளுக்கு தடை தொடரும் எனவும், மக்கள் வழக்கம்போல் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் கவனம் செலுத்தி நோய் தொற்று பரவலை தடுக்க வேண்டுமெனவும், தடுப்பூசி போட்டுக் கொள்ளாதவர்கள் அரசு சார்பில் அமைக்கப்பட்டுள்ள முகாம்களில் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளது

கருத்துகள் இல்லை: