ஞாயிறு, 5 ஜனவரி, 2020

கோயில்களில் உள்ளூர் பூசகர்கள் படிப்படியாக அகற்றப்பட்டு பிராமணர்கள் பூசகர்களாக மாறினர்.

Chozha Rajan : அந்தணர்கள் நீங்கலாக மற்ற அனைத்து பிரிவினரும் சூத்திரர்கள் என்ற பிரிவில் கொண்டு வரப்பட்டனர்.
நிலமற்ற உழவர்கள் கல்வி கற்பதிலும் கோவில் மற்றும் பொது நிகழ்வுகளிலும் ஒதுக்கப்பட்டனர்.
சோழர்களின் ஆட்சியின் இறுதியில் சாதிமுறையில் வலங்கை, இடங்கை பிரிவுகள் தோன்றியதால் சமூகத்தில் சண்டை சச்சரவுகள், அமைதியின்மை போன்றவை அதிகரித்தன.
சங்க இலக்கியங்கள் பொதுவாக மதச்சார்பற்றவை,
தங்களுக்கு எந்த ஒரு தெய்வீக தன்மையும் கூறிக்கொள்ளாதவை.
சங்க இலக்கியங்களில் தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதிணெண்கீழ்கணக்கு மற்றும் இரட்டைக்காப்பியங்களான சிலப்பதிகாரமும்,
மணிமேகலையும் அடங்கும்.
எட்டு தொகை, பத்துப்பாட்டு போன்றவற்றில் காதலும்
வீரமும் போற்றப்படுகின்றன.
இப்பேரரசு காலத்தில் அதிக அளவில் பக்தி இலக்கியங்கள் எழுதப்பட்டன.
தேவாரம், திருவாசகம், நாலாயிரத்திவ்ய பிரபந்தம், பெரியபுராணம், கம்பராமாயணம் போன்ற இலக்கியங்கள் சைவ, வைணவ சமயத்தை போற்றின.

நந்தி கலம்பகம், மூவருலா, கலிங்கத்து பரணி, நன்னூல், வீர சோழியம் போன்றவை மதசார்பற்ற இலக்கியங்களுள் குறிப்பிடத்தக்கவை.
பல்லவர்கள் காலத்தில் சமஸ்கிருதம் ஆட்சி மொழியாகவும் இருந்தது. சமஸ்கிருத கல்விக்கு அரசின் ஆதரவு இருந்த போதிலும் மத்த விலாச பிரகசனம், கிரிதார் ஜீனியம், அவந்தி சுவந்தி, கதாகாவிய தர்சம் போன்ற ஒரு சில சமஸ்கிருத இலக்கியங்களே புகழ் பெற்று விளங்கின.
சங்க கால வழிபாட்டு முறைகள் திணை அடிப்படையில் அமைந்திருந்தன.
சமூக-அரசியல் நடவடிக்கைகளில் சமயம் ஒரு முக்கியமான கூறாக இருக்கவில்லை.
வீரகற்கள் வழிபாடு இருந்தது.
கணேசர் வழிபாடு காணப்படவில்லை.
பிராமணர்களின் வேள்விகள், சில அரசர்களை கவர்ந்த போதிலும், மக்களிடையே அவை புகழ்பெறவில்லை.
சங்க காலத்தில் சமணம், பௌத்தம், அஜிவிகைசம் போன்ற சமய தத்துவங்கள் தமிழ் சமுதாயத்தில் இடம்பிடித்தன.
சோழர் ஆட்சியின் இறுதியில் முருக வழிபாடு புகழ்பெற்றது.
கோயில்களில் உள்ளூர் பூசகர்கள் படிப்படியாக அகற்றப்பட்டு பிராமணர்கள் பூசகர்களாக மாறினர்.

கருத்துகள் இல்லை: