வெள்ளி, 10 ஜனவரி, 2020

காவல் அதிகாரி வில்சன் கொலையில் ஆர் எஸ் எஸ் அமைப்பை விசாரிக்க வேண்டும்!

Sathyam Satheesh : காவல் அதிகாரி வில்சன் சுட்டுக்கொல்லப்பட்டது கண்டனத்திற்குரியது...குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்.
சில ஐயங்கள்...
இரண்டுபேர் ஓடுகிற சிசிடிவி காட்சிகளை காட்டி...இவர்கள் தான் குற்றவாளிகள்...தீவிரவாத இயக்கத்துடன் தொடர்பு என ஊடகங்களும் காவல்துறையும் கண்டுபிடித்தது எப்படி?
நுங்கம்பாக்கம் சுவாதி கொலையில் இதை போல ஒருவர் வேகமாக நடக்கிற ஒரு சிசிடிவி காட்சியை மட்டும் காட்டிவிட்டு மீனாட்சி புரத்தில் ஆடுமேய்க்கிற ஒரு சிறுவனை காவல்துறை கழுத்தறுத்து கொன்றது நினைவுக்கு வருகிறது.
போலீசை கொன்றவர்கள் தீவிரவாதிகள் என்றால்..சாதி திருவிழா வுக்கு பாதுகாப்பு க்கு சென்ற எஸ்ஐ ஆல்பின் வெட்டி கொல்லப்பட்டபோது அவர்கள் தீவிரவாதிகள் என நீங்கள் சொல்லவே இல்லையே. .மாறாக மர்ம நபர்கள் என்றுதானே சொன்னீர்கள்.
முதலில் சுட்டுத்தள்ளவேண்டியது குற்றங்களுக்கு மத வன்ம அடையாளம் பூசி மகிழும் ஊடகங்களை தான்.
ஒரே ஒரு சிசிடிவி காட்சியை வைத்து தீர்ப்பு எழுதும் ஊடகங்கள் தான்...இந்த நாட்டுக்கும் மனித சமூகத்துக்கும் ஆபத்தானவை.
நீங்களே தீர்ப்பெழுதி விட்டால் நீதிமன்றங்கள் என்ன மசிருக்கு?
இரண்டுபேரையும் தேடி பிடித்து சுட்டுக்கொல்வார்கள்..அவ்வளவு தான்...கடைசிவரை நடந்தது என்ன என யாருக்கும் தெரியாது..
உபியில் பாஜக நடத்திய போராட்டத்தில் காவலர் அடித்து கொல்லப்பட்டார்..அது விபத்து என நீதிமன்றமே வழக்கை ஊத்திமுடியது.
அமித்ஷா வழக்கை விசாரித்த நீதிபதி மர்மமாக மரணமடைந்தார்...அது தற்கொலை என ஊத்திமூடப்பட்டது.

பாசக ஆளும் வடமாநிலங்களில் வழக்கமாக நடைபெறும் ஒன்று பாசக நேரடியாக நுழைய வக்கற்ற தமிழகத்தில் நடக்கிறதென்றால் பின்னால் ஐஎஸ் அல்ல ஆர்எஸ்எஸ் இருக்கவே வாய்ப்பதிகம்.
குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக கொந்தளிக்கும் தமிழகத்தை...வழக்கம்போல பாகிஸ்தான்..தீவிரவாதிகள் என மடைமாற்றம் செய்ய நடத்தப்பட்ட ஆர்எஸ்எஸ் நாடகமாக இது ஏன் இருக்ககூடாது.
ஒரு பாராளுமன்ற தேர்தலுக்காக புல்வாமாவில் நாற்பது ராணுவவீரர்கள் வெட்டப்படுகிறபோது..நாடே பற்றி எரியும் மிகப்பெரும் போராட்ட களத்தை திசைதிருப்ப ஒரு போலீஸ் காரனை வெட்டுவது அவர்களுக்கு எளிதானது.
....
இசுலாமிய பெயர் என்றால் தீவிரவாதி
மற்ற பெயர்களுக்கு மர்மநபர்கள்.
புதியதலைமுறை அலுவலகத்தில் குண்டுபோட்ட இந்துத்துவ இயக்கத்தையும் மர்மநபர் என்று அந்த நடுநிலையே புழுகியதுதான் வெட்கம்.
தீவிர ஆர்எஸ்எஸ் வெறியனான கோட்சேவை காந்தியை கொல்ல அனுப்புமுன் அவர்கள் செய்த முதல் வேலை...நாதுராம் கோட்சேவின் கரங்களில் இஸ்மாயில் என பச்சை குத்தியதுதான்.
இதுவரை விசாரணையின்றி காவலர்களால் அநியாயமாக அடித்து கொல்லப்பட்ட மக்களோடு ஒப்பிட்டால் கொல்லப்பட்ட போலீசார் எண்ணிக்கை அதில் ஆயிரத்தில் ஒரு பங்கு கூட இல்லை தான் என்றாலும்....அதற்காக ஒரு கொலையை ஆதரிக்கமுடியாதல்லவா.?
இசட்பிளஸ் பாதுகாப்பில் இருந்த ஒரு மாநில முதல்வரையே ஒரு பிரச்சனையும் வராமல் காலாவதியாக்கியவர்களுக்கு இரண்டு உயிர்கள்..அதிலும் இசுலாமிய பெயர்கள் என்றால் சொல்லவா வேண்டும்....?
மீனாட்சிபுரம் ராம்குமாருக்கு நடந்தது தான் இந்த இருவருக்கும் நடக்க போகிறது....
ஓடினால் மரணதண்டனையா ணு கேட்ககூடாது..வேகமாக நடந்ததற்கே மரணதண்டனை கொடுத்திருக்கோம்.
நேர்மையான விசாரணை...மோடி எடப்பாடி ஆட்சியில்..அதுவும் இந்த விடயத்தில் நடக்க வாய்ப்பே இல்லை.
குற்றவாளிகள் என்றால் நிரூபித்துவிட்டு சுட்டுக்கொல்லுங்கள்..நீங்களே கதைவசனம் எழுதி அதற்காக கதாபாத்திரங்களை தேர்வு செய்யாதீர்கள்.

கருத்துகள் இல்லை: