திங்கள், 6 ஜனவரி, 2020

Roja Attacked நடிகை ரோஜாவை சொந்த கட்சியினரே தாக்கினர் ..


Veerakumar -  tamil.oneindia.com :சித்தூர்: ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியை சேர்ந்த நகரி தொகுதி, எம்.எல்.ஏ மற்றும் ஆந்திர பிரதேச தொழில்துறை உள்கட்டமைப்பு கழக (ஏபிஐஐசி) தலைவரான ரோஜாவின் கார், அவரது சொந்தக் கட்சியினராலேயே தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.
நல்ல வேளையாக ரோஜா தப்பினார். ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் ரோஜா. தொழில்துறை உள்கட்டமைப்பு கழக தலைவராக அவரை நியமித்தார் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி. இது அமைச்சருக்கு ஈடான பதவியாகும். இப்படி, கட்சியில் நல்ல செல்வாக்கோடு வலம் வரும் ரோஜா மீது சொந்த கட்சிக்குள்ளேயே சிலருக்கு பொறாமை எழுந்துள்ளது.
இப்படி, பொறாமையால் பொங்கிக்கொண்டு இருப்பவர்தான், ஒன்றிய குழு உறுப்பினர் அம்முலு. இருவருக்கும் ஏழாம் பொருத்தம். அவ்வப்போது ரோஜா மற்றும் அம்முலு ஆதரவாளர்கள் இடையே உரசல் நிலவி வருகிறது.
இந்த நிலையில்தான், சித்தூர் மாவட்டத்தில் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க ரோஜா இன்று சென்றார்.


சித்தூர் மாவட்டம், கே.வி.பி.புரத்தில் கிராமச் செயலகத்தின் தொடக்க விழாவை நடைபெற்றது. இதில்தான் ரோஜா பங்கேற்பதாக இருந்தது. அப்போது அம்முலு குழுவைச் சேர்ந்த சுமார் 200 பேர் ரோஜா காரை முற்றுகையிட்டனர்.
சிலர் கல்வீசி தாக்கினர். இதனால் ரோஜாவும், அவர் ஆதரவாளர்களும் அதிர்ச்சியடைந்தனர். போலீஸ் வருகை போலீஸ் வருகை இதையடுத்து போலீசார் விரைந்து வந்து, கூட்டத்தை கலைத்தனர்.
ரோஜாவை பத்திரமாக அங்கிருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த சம்பவம் குறித்து ரோஜா தனது கோபத்தை வெளிப்படுத்தியதோடு, காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பல பிரிவுகளில் வழக்கு பல பிரிவுகளில் வழக்கு ஐபிசியின் 143, 341, 427, 506, 509, 149 பிரிவுகளின் கீழ் பொலீஸ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இருப்பினும் இதுவரை இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை. அம்முலு ஆதரவாளர்கள் தாக்குதல் நடத்தியாக தகவல்கள் கூறினாலும், ரோஜா இதை வெளிப்படையாக சொல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: