திங்கள், 27 ஜனவரி, 2020

கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு.. பொதுமக்களுக்கு அறிவுறுத்தல் ...

Janaki Karthigesan Balakrishnan : ஸ்ரீ லங்கா வாழ் மக்களுக்கான கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு கீழே தரப்பட்டுள்ள கொரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு சிறீ லங்கா வாழ் மக்களுக்காக உள்பெட்டியில் நண்பர்களால் பகிரப்பட்டது.
 கரோனா வைரஸ் பற்றிய விழிப்புணர்வு
உலகையே அச்சுறுத்தி கொண்டிருக்கிறது கொரோனா வைரஸ். சீனாவில் தொற்றிய இந்த வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை பலர் பலியாகி இருக்கிறார்கள்.
இலங்கை சீனர்கள் அதிகம் வலம் வரும் நாடு என்பதால் இந்த கொடிய வைரஸ் தற்போது இலங்கையிலும் பரவும் அபாயம் நிலவுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த கொரோனா குடும்ப வைரஸ் வகைகளுக்கு இன்னும் தடுப்பு மருந்து கண்டு பிடிக்கப் படாத நிலையில் ஏற்கனவே கொரனா குடும்பத்தில் 6 வைரஸ் தொற்று இருக்கும் நிலையில் இவை 7 வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு 2019- nCoV (new strain of coronavirus) என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 2019 ஆம் கண்டறிந்ததற்காக 2019 என்ற ஆண்டையும் n என்பது புதிய என்றும், CoV என்பது கொரனாவையும் குறிக்கிறது.
2002 ல் சார்ஸ் SARS- CoV என்னும் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டது. இந்த வைரஸ் சீனாவில் தான் முதன் முதலில் கண்டறியப்பட்டது. இது வெளவால் மற்றும் காட்டுப்பூனையால் மனிதனுக்கு பரவியது. இந்த வைரஸ் தொற்றுக்கு 744 மக்கள் பலியானார்கள் என்பதும் இத்தருணத்தில் குறிப்பிட வேண்டும்.
சீன நாட்டில் அதிகப்படியான விலங்குகளின் ( ஆடு, கோழி தவிர பல தரப்பட்ட விலங்குகளையும்) இறைச்சியையும், கடல் வாழ் உணவுகளையும் சாப்பிடுகிறார்கள். இந்த இடத்தில் இருந்து தான் விலங்குகளை வெட்டி விற்பனை செய்யும் இடத்தில் பரவியிருப்பதாக கண்டறிந்துள்ளது.

இப்படித்தான் விலங்குகளிடைருந்து மனிதனுக்கு இந்த கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கிறது. இந்த வைரஸானது நுரையீரலை தாக்கி நிமோனியா காய்ச்சலை உண்டாக்குகிறது. இவை மனிதனிடமிருந்தும் மனிதனுக்கு பரவும் என்றும் சீனா தேசிய சுகாதார மையம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸ் உங்களை தாக்க தொடங்கியிருந்தால் என்ன மாதிரியான அறிகுறிகள் இருக்கும் என்பதையும் சீனாவின் தேசிய சுகாதார மருத்துவம் தெரிவித்துள்ளது. முதலில் காய்ச்சலில் தொடங்கும். அதாவது உடல் வெப்பத்தை காட்டிலும் அதிக வெப்பநிலையை கொண்டிருக்கும். தொடர்ந்து இருமலும் அதிகரிக்க தொடங்கும். சுவாசக்கோளாறு உண்டாகும். அதைத் தொடர்ந்து மூச்சுத்திணறலும் உண்டாகும். இவை படிப்படியாக அதிகரிக்க தொடங்கும்.
விலங்குகளிடமிருந்து விலங்குகளுக்கு பரவிய கொரனா வைரஸ் எப்போது விலங்குகளிடமிருந்து மனிதனுக்கு பரவியதோ அப்போதே மனிதனிடமிருந்து மனிதனுக்கும் இந்த வைரஸ் தொற்றிவிடும் அபாயம் உண்டு.
இவை காற்றில் பரவும் தன்மை கொண்டது, இத்தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் இருமும் போதும், தும்மும் போதும், சளியை உமிழும் போதும் இந்தக் கிருமிகள் காற்று வழியாக கலந்து விடும். இதை சுவாசிப்பவர்களுக்கும் தொற்றிக்கொள்ளும்.
பொதுமக்கள் அதிகம் பேர் கூடும் இடங்களிலும் சுற்றுலா பயணிகள் அதிகம் இருக்கும் இடங்களுக்கும் செல்வதை இந்த சூழ்நிலையில் தவிர்த்துக் கொள்வது சிறந்தது (Example : Colombo, Kandy, Galle etc). தவிர்க்க முடியாமல் செல்வதாக இருந்தாலும் முகமூடி அணிந்துகொள்ளுங்கள். இந்த அறிகுறி உங்களுக்கு தென்பட்டால் மருத்து வரை தயங்காமல் அணுகுங்கள். கைகளை சுத்தமாக சோப்பு போட்டு கழுவுங்கள். கைகளை முகத்துக்கு அருகில் கொண்டு சென்று சுவாசிப்பதையும் தவிர்த்துவிடுங்கள்

கருத்துகள் இல்லை: