சனி, 1 பிப்ரவரி, 2020

கல்வி உரிமையைப் பறிக்கும் பார்ப்பனர்கள் ....பேரா. கருணானந்தன் Prof. Karunanandan வீடியோ


சங்க இலக்கியத்தில் புலவர்கள் ஒரே சமுக பிரிவை சார்ந்தவர்கள் அல்ல .
தமிழில் .. இன்றுள்ள நிலைமையில் தமிழின் மிக தொன்மையான இலக்கியம் சங்க  இலக்கியம்.
சங்க இலக்கியத்துக்கு நூற்று கணக்கான புலவர்கள் தங்கள் புலமையை தந்துள்ளார்கள் .
சமஸ்கிருததின் தொன்மை இலக்கியம் என்ன ? ரிகிவேதம் !
ரிக்வேதத்தில் 1029 பாடல்கள் . இதை எழுதியவர்கள் அனைவருமே ஒரு பிரிவை சார்ந்தவர்கள் .. புரோகித கும்பல்!
புரோகிதம் அல்லாத வெறும் யாரும் அதை எழுதவில்லை.
ரிக்வேதம் என்பது இறை வேண்டுதலே அன்றி வேறுதுவும் அல்ல.
ரிஷிகள் என்று அவர்கள் சொல்வார்கள் ..  அவர்கள் முற்றும் துறந்த முனிவர்கள் அல்ல.
அனைத்து பற்றியும் கொண்ட நபர்கள் .
அந்த நபர்களுக்கு ஆதரவாகத்தான் அந்த இலக்கியங்கள் எழுதப்பட்டன.
அந்த ரிக்வேதத்தில் இரண்டே இரண்டு அரசகுல பெண்கள் தங்கள் கருத்துக்களை சொல்வதாக வருகிறதே தவிர அங்கே பெண்களுக்கும் இடமே இல்லை.
பிராமணர் அவர்களை சார்ந்த ஓரிரு சத்திரியர்கள்
இந்த சத்திரியர்களுக்கு கொடுத்தால் கூட அவர்களும் பிராமணர்களாக இருந்திருப்பார்களோ என்ற கதை ....
அங்கே பன்முக தன்மை இல்லை ..
அடித்தள மக்களது உணர்வுகள் அங்கே இல்லை.
ஆனால் அந்த ரிக்வேதம் என்பது கிருஷ்ண வர்ணம் கொண்ட மக்களை எப்படி அழிப்பது என்பதற்காக இந்திரன் போன்ற தேவர்களை வேண்டுதல்.
தங்களது எதிரிகளை பற்றி மிக சிறப்பாக சொல்லியிருக்கிரர்கள். வேற யாரும் சொல்ல வேண்டியதில்லை ..எங்களது எதிரிகளை இந்திரனே அழிப்பாயாக.
எந்த எதிரிகள்?
இந்த எதிரிகள் கரு நிறத்தவர்கள் ... கிருஷ்ண வர்ணம்
இந்த எதிரிகள் சப்பையான மூக்கை கொண்டவர்கள்.
இந்த எதிரிகள் கோட்டை கொத்தளங்களில் வாழ்பவர்கள்.
இந்த எதிரிகள் அணைகளை கட்டி நீரை தேக்கி வேளாண்மையை பெருக்கியவர்கள்.
இந்த எதிரிகள் எங்களுக்கு தெரியாத மொழியை பேசுபவர்கள்.
இவர்கள் பெண்களை தெய்வமாக வழிபடுகின்றனர்
இவர்கள் லிங்கங்களை வழிபடுகின்றனர்.
இவர்களது படைகளில் பெண்கள் போர் வீரர்களாக இருக்கின்றனர்.
இதையெல்லாம் நீங்கள் ஒப்பிட்டு பார்த்தால் வேதத்துக்கு முந்திய சிந்து வெளி நாகரீகத்தில் அனைத்தும் இருக்கிறது .
நம்மவர்கள் !

சங்க கால இலக்கியத்தை பார்த்தால் ....
வறுமை சொல்லப்படுகிறது .. கிழிந்த ஆடை .. அந்த ஆடையை தைத்த தையல்களே அந்த ஆடையாக மாறிவிட்டது என்று வருந்தி ... பசியோடு அலைந்த அந்த புலவன் .. முரசு கட்டிலில் படுத்துவிட்டு அயர்ந்து உறங்கிறான்
பெண்கள் .. அந்த வாணிபம் செய்கின்ற செய்திகள் ..
பெண்கள் ஊர்காவலர்களாக இருக்கிறார்கள்.
பெண்கள் புலவர்களாக இருக்கிறார்கள்.
46  பெண்புலவர்கள் சங்க இலக்கியத்தில் இருக்கிறார்கள்.
உலகில் எந்த மொழியிலும் இவ்வளவு பெண்கள் புலவர்களாக இருந்ததில்லை .
அந்த அளவுக்கு நமது நாகரீகம் நம்மை வெற்றி கொண்டவர்களை விட பண்பாட்டில் சிறந்த ஒன்று.
பரவலாக கல்வி இருந்திருக்கிறது ..
இந்த காணொளி முழுவதையும் தயவு கூர்ந்து பார்க்குமாறு வேண்டுகிறேன் .
பேராசிரியர் கருனாந்தம் அவர்கள் ஏராளமாணன் அரிய் செய்திகளை தொகுத்து அழகான எளிமையான தமிழில் கூறுகிறார் .இந்த பேச்சை கேட்பது பல நூறு நூல்களை படிப்பதற்கு ஒப்பாகும்.கூறும் அத்தனை செய்திகளும் கலப்படம் இல்லாத உண்மையாகும்
எந்த இடத்திலும் கூட்டலோ சுருக்கலோ இன்றி உள்ளது உள்ளபடி விளக்குகிறார்

கருத்துகள் இல்லை: