ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் மரணம்' - உறுதி செய்த அமெரிக்கா

hamza bin laden dead, al qaeda heir, who is hamza bin laden, osama bin laden son death, donald trump, america counter-terrorism operation, world news
tamil.indianexpress.com : 'ஒசாமா மகன் ஹம்சா பின்லேடன் மரணம்' - உறுதி செய்த டொனால்ட் டிரம்ப்< ஹம்ஸா பின்லேடனின் இழப்பு அல்-கொய்தாவின் முக்கியமான தலைமைத்துவ திறன்களையும் அவரது தந்தையுடனான அடையாள தொடர்பையும் இழக்கிறது
அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் தலைவனான ஒசாமா பின்லேடன் கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில் சுட்டுக்கொல்லப்பட்டதாக அமெரிக்கா அறிவித்தது. இதையடுத்து தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் எச்சரித்திருந்தார்.
இந்நிலையில், ஆப்கானிஸ்தான்-பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்க பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அல்கொய்தா வாரிசும் ஒசாமா பின்லேடனின் மகனுமான ஹம்சா பின்லேடன் இறந்ததை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் சனிக்கிழமை உறுதிப்படுத்தியதாக செய்தி நிறுவனம் பி.டி.ஐ தெரிவித்துள்ளது.

“ஆப்கானிஸ்தான் / பாகிஸ்தான் பிராந்தியத்தில் அமெரிக்காவின் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையில் அல்-கொய்தா உறுப்பினரும் ஒசாமா பின் லேடினின் மகனுமான ஹம்ஸா பின் லேடன் கொல்லப்பட்டார்” என்று டிரம்ப் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார் என்று அச்செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.
ஹம்ஸாவின் மரணம் குறித்த ஊகங்கள் கடந்த மாத தொடக்கத்தில் இருந்து வெளி வந்தன. ஆனால் இன்று வரை எதுவும் உறுதிப்படுத்தப்படவில்லை. கொல்லப்பட்ட அல்கொய்தா தலைவரின் குடும்பம் பல தலைமுறைகளாக வாழ்ந்த சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில் பிறந்ததாக கூறப்படும் ஹம்ஸா, சுமார் 30 வயதுடையவர் என்று கூறப்படுகிறது.
அவர் கொல்லப்பட்ட இடம் மற்றும் சூழ்நிலை குறித்து அமெரிக்க ஜனாதிபதியால் குறிப்பிடப்படவில்லை என்றாலும், அவர் கூறுகையில், “ஹம்ஸா பின்லேடனின் இழப்பு அல்-கொய்தாவின் முக்கியமான தலைமைத்துவ திறன்களையும் அவரது தந்தையுடனான அடையாள தொடர்பையும் இழக்கிறது என்பது மட்டுமல்லாமல், அவர்கள் குழுவின் முக்கியமான செயல்பாட்டு நடவடிக்கைகளையும் குறைக்கும்.” என்றார்.
பல்வேறு பயங்கரவாத குழுக்களைத் திட்டமிடுவதற்கும் கையாள்வதற்கும் ஹம்ஸா பொறுப்பு வகித்தார் என்று டிரம்ப் கூறினார்.
மேலும், “ஹம்ஸா நம் நாட்டுக்கு மிகவும் அச்சுறுத்தலாக இருந்தார். அவர் நம் நாட்டைப் பற்றி மிகவும் மோசமான விஷயங்களைச் சொன்னார்,” என்றும் டிரம்ப் கூறியுள்ளார்.
பின்லேடனுக்கு பின்னர் அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் முடி இளவரசராகவும் பார்க்கப்படும் ஹம்ஸா பின்லேடனை கடந்த 2017-ஆம் ஆண்டு அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது

கருத்துகள் இல்லை: