சனி, 24 பிப்ரவரி, 2018

நம்ம ஸ்டேஷன்ல இருக்கவங்க பாதி பேர் நம்ம ஆளு தான்.. ஒண்ணும் ஆகாது

பிரிந்தா :தரையில் சிறுவனின் சடலத்தின் பார்த்திட்டு கேட்டான் "செத்துட்டானா?"
"ம. இப்ப தான். கழுத்தில் ஒரே இழு தான், போய் சேர்ந்திட்டான். ஆனால் அதுக்கு முன்னாடி நிறைய கத்தினான், சல்லிபய", அடுத்தவன் அமைதியா பதில் சொன்னான்.
"நீ ஏன் இவனைக் போய் கொன்ன? 8 வயசு தானே என்ன பண்ணிடுவான்?" பெரிசா கவலைப்படாமல் அடுத்தவன் கேட்டான்.
"வளர்த்து வந்தா திருப்பி நிலம் சம்பந்தமா சண்டை போடுவான். இவன் எல்லாம் இருந்து என்ன சாதிக்க போறான். விடு" என்றான்.
"அப்ப சரிதான். இவன் அம்மாவுக்கும் நல்லா காட்டு காட்டி இருக்கேன். இனி நம்ம வழிக்கு வரமாட்டா."
மூன்றாவதா நுழைஞ்சவன்
"சரி, பேசி டைம் வேஸ்ட் செய்யாதிங்க. இவன் அக்காவுக்கு 14 வயசு. இருந்தாலும் நம்ம யாருனு காட்டனுமில்ல. அப்பதான் இருக்க வேண்டிய இடம் என்னனு இவங்களுக்கு புரியும். சிக்கிரம் போய் முடிச்சிட்டு வாங்க".
அடுத்தவன் "டேய் பிரச்சனை பெரிசா ஆயிடபோதுடா"

இவன் "அதெல்லாம் ஒன்னும் ஆகாது. நம்ம ஸ்டேஷன்ல இருக்கவங்க பாதி பேர் நம்ம ஆளு தான். இவங்களுக்கு புகார் தர தைரியம் இருக்கா? அதுவுமில்லாம நம்ம தலைவர் இருக்கும் போது கவலை என்ன?"
குறிப்பு: முழுக்க கற்பனை தான்:(

கருத்துகள் இல்லை: