செவ்வாய், 13 பிப்ரவரி, 2018

சபரிமாலா : கல்வித்துறையிலும் சினிமாகாரர்களா ? அரசின் கல்வி விழிப்புணர்வு பிரசாரத்திலும்

தினமலர் :காரைக்குடி:கல்வித்துறை விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் ஆசிரியர்களை வைத்து நடத்தாமல், நடிகர் தாமு மூலம் நடத்துவது, திறமையானவர்களை அரசு மதிக்கவில்லை,'' என சபரிமாலா பேசினார்.காரைக்குடி அழகப்பா பல்கலையில் 'இலக்கு 2040 அறக்கட்டளை' சார்பில் கனவு காணுங்கள் 2018' என்ற நிகழ்ச்சி நடந்தது.
இதில் நீட் தேர்வுக்காக பணியை ராஜினாமா செய்த விழுப்புரம் ஆசிரியை சபரிமாலா கூறியதாவது: ஒரு காலத்தில் நீட் நிச்சயம் ரத்து செய்யப்படும். தனியார், அரசு பள்ளிகளில் பொது கல்வி முறை கொண்டு வர வேண்டும். எது வியாபாரம் ஆனாலும் மீட்டு விடலாம். கல்வி வியாபாரம் ஆனால், ஆயிரம் ஆண்டுகளானாலும் கொண்டு வர முடியாது. 'இலக்கு 2040' என்ற அமைப்பை தொடங்கியுள்ளேன்.
45 ஆயிரம் மாணவர்களை சந்தித்து தன்னம்பிக்கையை விதைத்து வருகிறேன்.கல்வி அரசியலாக்கப்பட்டுள்ளது. கல்வி துறை திறமைசாலிகளை அங்கீகரிப்பது இல்லை. 'தேர்வை கொண்டாடுவோம்' என்ற கல்வி விழிப்புணர்வு நிகழ்ச்சி நடிகர் தாமு மூலம் நடத்தப்படுகிறது.
ஏன் கல்வி துறையில் திறமைசாலிகள் இல்லையா? அரசியலிலிருந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி வரை நடிகர்கள் தேவைப்படுகின்றனர். இதில் மாற்றம் வேண்டும்.கேரளாவில் அரசு அதிகாரிகள் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளியில் படிக்க வைக்க வேண்டும் என்பதை முன்னெடுத்துள்ளனர். தமிழகத்தில் தனியார் பள்ளியில் சேர்க்கின்றனர். முதல்வரிலிருந்து அரசு ஊழியர் வரை அனைவரும் தங்கள் பிள்ளைகளை அரசு பள்ளியில் சேர்க்க வேண்டும் என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வு நடத்த போகிறேன்.உயர்கல்வி துறையில் ஊழல் என்பது காலம், காலமாக நடக்கிறது. லட்சக்கணக்கில் பணம் வாங்கித்தான் பணியிடம் ஒதுக்கப்படுகிறது,என்றார்.

கருத்துகள் இல்லை: