
மேலும், பாராளுமன்றத்திற்கு உடனே தேர்தல் நடத்திட வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். இதற்கிடையே, ரணில் விக்கிரமசிங்கேவை பிரதமர் பதவியில் இருந்து நீக்கிவிட்டு நிமல் சிறிபாலா டி செல்வா என்பவரை பிரதமராக்க வேண்டும் என இலங்கை சுதந்திரா கட்சியில் குரல் எழுந்துள்ளது.< ரணில் விக்ரமசிங்கேவை பதவி நீக்கம் செய்வது தொடர்பாக அந்நாட்டின் அட்டார்னி ஜெனரலிடம் அதிபர் மைத்ரிபாலா ஆலோசனை கேட்டுள்ளதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.
இந்த எதிர்ப்பு குரல் தொடர்பாக இதுநாள்வரை அமைதி காத்துவந்த ரணில் விக்கிரமசிங்கே இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். ராஜபக்சேவின் வலியுறுத்தல் தொடர்பான கேள்விக்கு பதில் அளித்த அவர், ‘என்னைப் பொருத்தவரை பிரதமர் பதவியில் நான் தொடர்ந்து நீடிப்பேன்’ என்று தெரிவித்தார்.
இலங்கை நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தில் சமீபத்தில் செய்யப்பட்ட சட்டதிருத்ததின்படி, அந்நாட்டின் அதிபர் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தாலோ, அல்லது, பாராளுமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி அடைந்தாலோ மட்டும்தான் அவர் பதவி விலக வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக