ஞாயிறு, 21 மே, 2017

7 வருடங்களாக மிரட்டி பலாத்காரம் ...காங்கேஷ் ஆனந்தா தீர்த்தபாத சுவாமிகள் ,,, பன்மணி ஆச்சிரமம்

திருவனந்தபுரம்: கேரளாவில் எர்ணாகுளம் அருகே கோலஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஹரி(54). இவர் கொல்லம் அருகே பன்மனையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் ஆசிரமத்தில் சாமியாராக உள்ளார். ஆசிரமத்தில் சேர்ந்த பின்னர் தன் பெயரை கங்கேஷ் ஆனந்த தீர்த்தபாத சுவாமி என மாற்றிக்கொண்டார். பன்மனை ஆசிரமத்தின் கிளை திருவனந்தபுரம் பேட்டையில் உள்ளது. பேட்டையில் உள்ள ஆசிரமத்தில் சாமியார் கங்கேஷ், கடந்த பல வருடங்களாக
தங்கியிருந்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று பூஜை செய்வது வழக்கம். அந்த வகையில் பேட்டை பகுதியில் உள்ள பெண்ணின் கணவர் நோய்வாய்பட்டு படுத்த படுக்கையாக இருந்துள்ளார். இவர்களுக்கு 23 வயதான ஒரு மகளும், 18 வயதான ஒரு மகனும் உள்ளனர். மகள் சட்ட படிப்பு படித்து வருகிறார். இந்த வீட்டிற்கு சாமியார் கங்கேஷ் கடந்த 7 வருடமாக சென்று பெண்ணின் கணவர் நோய் குணமாக பூஜைகள் செய்து வருகிறார். மாதத்தில் பாதி நாட்களுக்கு சாமியார் இந்த வீட்டிற்கு வந்து செல்வது வழக்கம் என கூறப்படுகிறது.


இந்நிலையில் பெண்ணுக்கும், சாமியார் கங்கேஷ்க்கும் தகாத உறவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே சாமியாரின் காமப் பார்வை பெண்ணின் மகள் மீதும் பாய்ந்தது.  தற்போது சட்டம் பயிலும் அந்த மாணவியை மிரட்டி சாமியார் பலாத்காரம் செய்து வந்துள்ளார். இது பல வருடங்களாக தொடர்ந்துள்ளது. இதற்கு மாணவியின் தாயும் உடந்தை. இந்த நிலையில் நாளுக்குநாள் சாமியாரின்  தொல்லை அதிகரித்துள்ளது. இதை சகிக்க முடியாமல் மாணவி சாமியாரை பழிவாங்க திட்டமிட்டார். நேற்று முன்தினம் இரவும் சாமியார் வழக்கம் போல் மாணவி வீட்டிற்கு வந்தார். இவர் வருவதை முன்பே தெரிந்து வைத்திருந்த மாணவி கத்தியை தயாராக வைத்திருந்தார். சாமியார் கங்கேஷ் வீட்டிற்குள் நுழைந்ததும் மாணவியை பலாத்காரம் செய்ய முயன்றார். அப்போது மாணவி  கத்தியை எடுத்து சாமியாரின் மர்மஉறுப்பை அறித்து எறிந்தார். ரத்த வெள்ளத்தில் கங்கேஷ் துடிதுடித்து கதறினார். சத்தம் கேட்டு மாணவியின் தாயும் தம்பியும், அக்கம்பக்கத்தினரும் ஓடி வந்தனர். பின்னர் அந்த மாணவி பேட்டை போலீசிற்கு போன் செய்து விவரத்தை கூறினார்.

போலீசார் அங்கு விரைந்து சென்று சாமியாரை மீட்டு திருவனந்தபுரம் அரசு மருத்துவகல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். பரிசோதனையில் 90 சதவீத மர்ம உறுப்பு அறுந்தது தெரியவந்தது. தற்போது அவர் சிறுநீர் கழிப்பதற்கு வசதியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சாமியாருக்கு எதிராக பேட்டை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மாணவி மீது வழக்கு எதுவும் பதியவில்லை.சுய பாதுகாப்புக்காக செய்த செயல் என்பதால் போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்யவில்லை. இதுகுறித்து கொல்லம் பன்மனை ஆசிரம நிர்வாகிகள்  கூறியதாவது: சாமியார் கங்கேஷ்க்கும் பன்மனை ஆசிரமத்திற்கும் எந்த தொடர்பு  இல்லை. கடந்த 15 வருடங்களுக்கு முன்பே எங்கள் ஆசிரமத்தில் இருந்து அவர்  சென்று விட்டார். எங்கள் ஆசிரமத்தில் பலரும் வந்து தங்குவது உண்டு. அதேபோல்  அவரும் தங்கியிருக்கலாம் என்று கூறினர்.

முதல்வர் பாராட்டு
திருவனந்தபுரத்தில் பேட்டியளித்த கேரள முதல்வர் பினராய் விஜயன், “மாணவியின் செயலை நான் பாராட்டுகிறேன். மாணவிக்கு அரசு ஆதரவு அளிக்கும்” என்றார். அப்போது இந்த விஷயத்தில் அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா என்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு, ‘‘ஏற்கனவே கடும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதே. இனி மாணவிக்கு தேவையான ஆதரவு அளித்தால் மட்டும் போதும்’’ என்று கூறினார்.

கொடுமை தாங்காததால் அறுத்தேன்
மாணவி போலீசிடம் கூறியதாவது: நான் 16வது வயதில் பிளஸ்1 படிக்கும் போது முதல் சாமியார் கங்கேஷ் என்னை மிரட்டி பலாத்காரம் செய்து வந்தார். இதுகுறித்து பல முறை நான் எனது தாயாரிடம் கூறியும் அவர் கண்டுகொள்ளவில்லை. 7 வருடங்களாக தொடர்ந்து வரும் இந்த கொடுமையை இனியும் தாங்கி கொள்ள முடியாது என்பதால் சாமியாரின் மர்ம உறுப்பை வெட்டினேன் என்றார். இதற்கிடையே மாணவியின் தாயாரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். விசாரணைக்கு பின் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்படுகிறது.தினகரன்

கருத்துகள் இல்லை: