டெல்லி:
அரசியல்வாதிகளையும் கார்ப்பரேட் நிறுவனங்களையும் கதிகலக்கியிருக்கும் சமூக
ஆர்வலர் அர்விந்த் கெஜ்ரிவால் குழு அடுத்த அஸ்திரத்தை நீதித்துறையை நோக்கி
வீசத் தயாராகி வருகிறது.
டெல்லியில் நேற்று வெளிநாட்டில் பணம் பதுக்கிய கார்ப்பரேட்
முதலாளிகளை அம்பலப்படுத்திய கெஜ்ரிவாலிடம் நீதிமன்றத்தில் ஏன்
முறையிடவில்லை என்று கேள்வி கேட்கப்பட்டது. அதற்குப் பதிலளித்த அவர்,
நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகள் முடிவுக்கு
வராமலேயே நிலுவையில் இருக்கின்றன என்று கூறியதுடன் "இதுபற்றி விரைவில் பல
விஷயங்களை பிரசாந்த் பூஷண் செய்தியாளர்களிடம் விவரிப்பார்" என்றும்
கூறியிருந்தார்.இதைத் தொடர்ந்து நீதித்துறை தொடர்பான முறைகேடுகளை
கெஜ்ரிவால் குழு அடுத்து அம்பலப்படுத்த தயாராக இருப்பதாகவும் இதற்காகவே
கெஜ்ரிவால் இப்படி ஒரு பதிலை கூறியிருப்பதாகவும் டெல்லி வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
ஆக அடுத்து நீதித்துறையில் கரையைக் கடக்கப் போகிறது கெஜ்ரிவால் புயல்?
http://tamil.oneindia.in/ தம்பி கேஜ்ரி வாலு முதல்லையே நீதிக்குதான்ய தண்டனை கொடுக்கணும்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக