வெள்ளி, 9 நவம்பர், 2012

கலிங்கப்பட்டியில் போய்ப் பார்த்தால் வைகோவின் செல்வாக்கு தெரியும்.. சம்பத் கடும் தாக்கு


Posted by:

 Nanjil Sampath Condems Vaiko Effigy Protest நாகர்கோவில்: எனது சொந்த ஊரில், அதுவும் என் தாய் பிறந்த ஊரில் எனது கொடும்பாவியை எரித்துள்ளனர். சொந்த ஊரில் எனக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக இப்படிச் செய்துள்ளனர். யாருக்கு சொந்த ஊரில் செல்வாக்கு இல்லை என்பதை கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும் என்று மதிமுக பொதுச் செயலாளர் வைகோவை, கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் நாஞ்சில் சம்பத் விமர்சித்துள்ளார்.
வைகோ, நாஞ்சில் சம்பத் இடையே என்ன பிரச்சினை என்று தெரியவில்லை. இந்த நிலையில் நக்கீரன் இதழுக்கு நாஞ்சில் சம்பத் அளித்த பேட்டியில், அவரை சாரைப்பாம்பு என்று கடுமையான வார்த்தைகளால் விமர்சித்திருந்தார். இந்த நிலையி்ல சம்பத்தின் சொந்த ஊரில் அவரது கொடும்பாவியை மதிமுகவினர் கொளுத்தினர்.

இதுகுறித்து மாலைமலருக்கு சம்பத் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது
நாஞ்சில் சம்பத்தின் சொந்த ஊரில் அவருக்கு செல்வாக்கு இல்லை என்று காட்டுவதற்காக சிலர் நடத்திய நாடகமே எனது கொடும்பாவி கொளுத்தப்பட்ட சம்பவம். இதை கொளுத்த சொன்னவர்களுக்கும், கொளுத்தியவர்களுக்கும் இதனால் மகிழ்ச்சி கிடைக்கும் என்றால் அந்த மகிழ்ச்சிக்கு நான் குறுக்கே நிற்கமாட்டேன்.

ஆனாலும் பிதாவே இவர்களை மன்னியும். இவர்கள் செய்வது என்னவென்று தெரியாமல் செய்கிறார்கள் என்று பிரார்த்தனை செய்வேன்.

மதிமுகவில் இருந்து என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை தேடுகிறேன். மதிமுக இயக்கத்தின் வளர்ச்சிக்காக போராடியவன். மதிமுகவில் கொள்கை பிடிப்போடு இருந்ததால் முதலில் கைது செய்யப்பட்டவனும், முதலில் வழக்கை சந்தித்தவனும், முதல் விபத்தில் சிக்கியவனும் நான்.

இப்போது எனக்கு எதிராக கொடும்பாவி கொளுத்தியதன் மூலம் இன்னும் நான் இயக்கத்தில் இருக்கிறேன் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால் என்னை புறக்கணிப்பதற்கான காரணத்தை இதுவரை யாரும் தெரிவிக்கவில்லை.

நான் இதுவரை 4 பேர் நகைக்கும்படி, முகம் சுழிக்கும்படி, பழிச்சொல் பேசும்படி நடந்ததில்லை. கழகத்தின் நிர்வாகத்தில் தலையிட்டதோ, அத்துமீறி நடந்து கொண்டதோ இல்லை. யாருக்காகவும் சிபாரிசுக்கும் போய் நின்றதில்லை. இயக்கத்தை சேதாரமின்றி வழி நடத்த இரவு பகலாக, பகல் இரவாக உழைத்துள்ளேன். இதற்கு பின்பும் நான் புறக்கணிக்கப்படுவதற்கான காரணத்தை தேடிக்கொண்டிருக்கிறேன்.
மதிமுகவில் எனக்கு தொண்டர்கள் ஆதரவு இல்லை என்று காட்டுவதற்காகவே திட்டமிட்டு எனது சொந்த ஊரில், அதுவும் எனது தாய் பிறந்த ஊரில் என் கொடும்பாவி கொளுத்தப்பட்டுள்ளது. இது வைகோ நடத்திய நாடகம். சொந்த ஊரில் யாருக்கு செல்வாக்கு இருக்கிறது என்பது பற்றி கலிங்கப்பட்டியில் போய் விசாரித்தால் தெரியும்.

திராவிட இயக்கத்தின் சமகால தமிழக அரசியலில் இதுவரை யாரும் தொடாத உச்சத்தை தொட்டவன் நான். எல்லா கட்சிகளும் என்னை விரும்புவார்கள். ஆனால் இதுபற்றி முடிவு எடுக்க நான் பலமுறை யோசிக்க வேண்டும்.
ஆனால் என்னை விட காலம் முக்கியமானது. காலம் எடுக்கும் முடிவுக்கு கட்டுப்படுவேன்.

இன்னொன்று, அரசியலில் சேராமலேயே நான் சுடர் விட முடியும். அரசியல் எல்லை தாண்டி நான் இலக்கிய தளத்தில் கொடி பறக்கவிட்டவன். அந்த தளத்தில் இன்னும் கூடுதல் கவனம் செலுத்தினால் என்னால் மேலும் உயர முடியும்.

எனது இல்ல திருமண விழாவில் பங்கேற்க வைகோவை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்திருந்தேன். இப்போது ஏற்பட்ட நிலைமைக்கு பிறகு அவர் என் வீட்டு திருமண விழாவில் பங்கேற்க வரவேண்டாம் என்று கூறுகிறேன் என்றார் அவர். http://tamil.oneindia.in/#

கருத்துகள் இல்லை: