ஞாயிறு, 4 நவம்பர், 2012

6.56 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய தகுதித் தேர்வில் 19,246 பேர் மட்டுமே ‘பாஸ்’

சென்னை: தமிழகத்தில் 6.56 லட்சம் ஆசிரியர்கள் எழுதிய தகுதி தேர்வில் 19, 246 பேர்தான் தேர்ச்சி பெற்றிருக்கின்றனர்.
புதிதாக ஆசிரியர் பணியில் சேர்வதற்கு பி.எட்.படித்திருந்தாலும், இடைநிலை ஆசிரியர் பயிற்சி முடித்திருந்தாலும் மாநில அரசுகள் நடத்தும் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும் என்பது மத்திய அரசின் புதிய சட்டம்.
தமிழகத்தில் கடந்த ஜூலை மாதம் ஆசிரியர் தகுதி தேர்வு நடத்தப்பட்டது. இதில் 6 லட்சத்து 50 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர். ஆனால் 2,500 பேர்கள் மட்டுமே தேர்ச்சி பெற்றனர். இதைத்தொடர்ந்து மீண்டும் ஆசிரியர் தகுதித்தேர்வு கடந்த அக்டோபர் 14-ல் நடத்தப்பட்டது. மொத்தம் 6,56,698 பேர் தேர்வு எழுதினர்.

முதல் தாளில் 10,397 பேரும் 2வது தாளில் 8,849 பேரும் 60% மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேலும் எடுத்து தேர்ச்சிபெற்றுள்ளனர். மொத்தம் 19, 246 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
பட்டதாரி ஆசிரியர்களுக்கு காலிப்பணியிடங்கள் 18 ஆயிரம் உள்ளது. அதனால் தேர்ச்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்கள் 8849 பேர் மட்டுமே உள்ளதால் இவர்கள் அனைவருக்கும் வேலை கிடைக்கும். அதே நேரத்தில் இடைநிலை ஆசிரியர் காலிப்பணியிடங்கள் 7 ஆயிரத்து 500 மட்டுமே உள்ளதால் தேர்ச்சி பெற்ற இடை நிலை ஆசிரியர்களில் பெரும்பாலானவர்களுக்கு வேலை கிடைக்கும். வேலைக்காக சான்றிதழ் சரிபார்ப்பு 6-ம் தேதி முதல் அனைத்து மாவட்டங்களிலும் நடக்க உள்ளது. அவர்களுக்கு அழைப்புக்கடிதம் எதுவும் ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருந்து அனுப்பப்பட வில்லை. அவர்கள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வெளியிட்டுள்ள அழைப்பு கடிதத்தை பதிவிறக்கம் செய்து சான்றிதழ் சரிபார்த்தலில் கலந்துகொள்ளவேண்டும் http://tamil.oneindia.in/

கருத்துகள் இல்லை: