செவ்வாய், 6 நவம்பர், 2012

வீரபாண்டி பேத்தி நிச்சயதார்த்தம்:பங்கேற்ற அரசு அதிகாரிகள் கலக்கம்

சேலம்: தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் பேத்தியும், மாஜி எம்.எல்.ஏ., ராஜாவின் மகளுமான, டாக்டர் மலர்விழியின், திருமண நிச்சசயதார்த்தம் நேற்று முன்தினம் பூலாவரியில் நடந்தது. இதில் கலந்து கொண்ட அரசுத்துறை அதிகாரிகள், தொழில் அதிபர்கள், போலீஸ் அதிகாரிகளின் பட்டியலை உளவுத்துறை போலீஸார், அரசின் பார்வைக்கு கொண்டு செசன்றுள்ளனர். இது, அதிகாரிகள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
தி.மு.க., மாஜி அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகத்தின் மகன் ராஜா. இவர் கடந்த தி.மு.க., ஆட்சியின் போது, சேலம் மாவட்டம், வீரபாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்தார். ராஜாவின் மூத்த மகள் டாக்டர் மலர்விழிக்கும், கடலூரை சேர்ந்த, அ.தி.மு.க., பிரமுகர் டாக்டர் இளவரசனின் மகன் செந்தில்ஆனந்துக்கும் திருமணம் முடிவு செசய்யப்பட்டது. கடந்த, 25 நாட்களுக்கு முன், டாக்டர் இளவரசனை, அ.தி.மு.க.,வில் இருந்து நீக்கி, முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.இந்நிலையில், நேற்று முன்தினம், டாக்டர் மலர்விழி, டாக்டர் செசந்தில் ஆனந்தின் திருமண நிச்யதார்த்தம், சேசலம் மாவட்டம் பூலாவாரியில் உள்ள, வீரபாண்டி ஆறுமுகத்தின் வீட்டில் நடந்தது.

நிச்சயதார்த்த நிகழ்ச்சியில், தமிழகம் முழுவதிலும் இருந்து, தி.மு.க., முக்கிய பிரமுகர்கள் உட்பட ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். சேலம் உத்தமசேசாழபுரம் துவங்கி, பூலாவரி வரியில் ரோட்டின் இருபுறங்களிலும் கார்கள் அணி வகுத்து நின்றன.நிச்சயதார்த்தம் குறித்து தகவல்கள் கசிந்த நிலையில், அதில் கலந்து கொண்டவர்களை உளவுப்பிரிவு போலீஸார் தீவிரமாக கண்காணித்தனர். இந்த கண்காணிப்பு வலையில், பல அரசுத்துறை அதிகாரிகள் சிக்கி உள்ளனர். http://www.dinamalar.com/

கருத்துகள் இல்லை: