மாலை மலர் : இந்தியாவின் பிரபலமான தொழில் நகரம் ஜாம்ஷெட்பூர். டாடா குழுமத்தால் உருவாக்கப்பட்ட இந்த நகரில் ஸ்டீல் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.
இந்தியாவிலேயே சிறப்பாக திட்டமிட்டு உருவாக்கப்பட்ட தொழில் நகரமாக ஜாம்ஷெட்பூர் விளங்கி வருகிறது.
இந்த வரிசையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூர் நகரம் வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது.
பல்வேறு தொழில் நிறுவனங்களின் ஆலைகள், உற்பத்தி கூடங்கள் ஓசூரில் இயங்கி வருகின்றன. 2020 ஆம் ஆண்டு டாடா எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் தனது ஆலையை ஓசூரில் கட்டமைத்தது. இந்த ஆலை நாட்டின் மிகப்பெரிய ஐபோன் உற்பத்தி செய்யும் ஆலையாக மாற இருக்கிறது.
உற்பத்தி துறையை விரிவுப்படுத்தும் வகையில் டாடா குழுமம் இதே பகுதியில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை அமைக்க திட்டமிட்டுள்ளது. இதோடு பணியாளர்கள் தங்குவதற்கு வீட்டு வசதியும் இதே பகுதியில் வழங்கப்பட இருக்கிறது.
புதிய ஆலைகளை உருவாக்குவதன் மூலம் ஓசூரில் அதிகம் பேருக்கு பணி வழங்கும் நிறுவனமாக டாடா எலெக்ட்ரானிக்ஸ் உருவெடுக்க இருக்கிறது. தமிழ்நாடு தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா இது குறித்து பேசும் போது, வளர்ச்சியில் ஜாம்ஷெட்பூரை முந்தும் அளவுக்கு ஓசூரில் அதிக வசதிகள் உள்ளன என்றார்.
இந்த நகரில் உற்பத்தி மட்டுமின்றி பல்வேறு உள்கட்டமைப்பு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக ஓசூரை தகவல் தொழில்நுட்ப மையமாகவும் மாற்ற முடியும் என்று தெரிவித்தார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக