புதன், 21 ஆகஸ்ட், 2024

முகநூலில் முகமூடிகள் -Bunker syndrome பங்கர் சின்ரோம் உள்ளவர்கள்

ராதா மனோகர்  முகநூலில் முகப்புக்களை மூடி வைத்துக்கொண்டு அழைப்பு அனுப்புவது என்பது ஒருவகை பங்கர் மனோநிலை சின்ரோம் உள்ளவர்கள் என்ற ஐயம் எனக்குண்டு
இருந்தாலும் அந்தந்த நேரத்து மூட் அடிப்படையில் சிலவேளைகளில் அவற்றை சேர்ப்பதுவும் உண்டு.
தங்கள் அடையாளங்களை பொதுவெளியில் மறைத்து கொண்டு பிறர் விடயங்களை சுதந்திரமாக ஆய்வு செய்யும் பலர் மிக மோசமான சயனைட் வியாதியால் பாதிப்புற்றவர்கள் என்ற அனுதாபம் கூட அவர்கள் மீது உண்டு
அதிலும் இப்படியாக சுய அடையாளங்களை மறைத்து கொண்டு உலா வருவோர் பெரும்பாலும் பிரேமதாசா வீட்டில் பலகாலமாக உற்ற நண்பனாக பணியாளராக நடித்துக்கொண்டே அவரை கொன்றவர்கள் கூட்டத்தை சேர்ந்தவர்கள்தான்.
இப்படிப்பட்டவர்களுக்கு பொழுது இன்னும் புலரவில்லை
தாங்கள் மிகவும் பாதுகாப்பாக இருந்து கொண்டு பிறரின் விடயங்களை எல்லாம் அறிந்திருக்கிறோம் என்ற கனவில் இன்னும் அதே பாணி சிந்தனையை விட்டு கொஞ்சம் கூட பரிணாம வளர்ச்சி அடையாதவர்கள் அந்த சிந்தனை எவ்வளவு தோல்வியை தந்தாலும் பாடங்களை படிப்பதாக இல்லை


பங்கர் சின்றோம் நோயாளிகளே அந்த சிந்தனைதான் உங்களுக்கு முள்ளிவாய்க்காலை தந்தது என்பதுதான் உண்மை!
ஜனநாயக பொறிமுறையின்  ஆதாரமே கருத்துக்களின் வெளிப்படையான பரிமாற்றம்தான்
மனிதர்களின் கருத்துக்கள்தான் சமூக உயர்வுக்கு உரிய பாதை .
மூடிய கதவின் இருட்டுக்குள் இருந்து கொண்டு நீங்கள் சாதிக்க போவது எதுவுமே இல்லை.
வெறும் சந்தேகம் உங்களுக்கு ஒன்றையுமே பெற்று தராது.

(அண்மையில்  ஒரு பிரபலமான இலங்கை ஊடகி ஒருவர் மொத்தமாக மூடிய முகமும் மூடிய முகநூலுமாக அழைப்பு அனுப்பினார்  ..
ஊடகத்தில் கொடிநாட்டும் இவரே இப்படி முகமூடியோடு வந்தால் இவரை போன்றவர்கள் எப்படி சுதந்திரமாக  கருத்துக்களை மக்கள் முன்வைக்க முடியும்?
அன்பரே முகமூடி உங்களுக்கு தேவை இல்லையே?
முகமூடி என்பது அடிமை சின்னம்தான் .. குறிப்பாக இந்த ஊடகியின்) 

கருத்துகள் இல்லை: