Pon Raj : 15 வருடங்களுக்கு முன்னர் இலங்கையில் போ-ர் நடைபெற்றதற்குப் பல்வேறு காரணிகள் இருந்தாலும் அதன் அடிப்படை, மொழி சார்ந்த ஒரு விதமான இனவாதப் போர் என நாம் அறிவோம்.
அதே இலங்கையில் அதன் தலைவர், இன்று தன் நாட்டு சிங்கள மொழி பேசும் மக்களை, "தமிழ் மொழியைக் கற்றுக் கொள்ளுங்கள் என பேச ஆரம்பித்து இருக்கிறார்". இது ஒரு மிகப்பெரும் மாற்றம்.
தமிழ்நாட்டின் பொருளாதாரம் 1 டிரில்லியன் நோக்கிச் செல்லும் போது, தமிழ் மொழியைக் கற்றுக் கொண்டு அங்குள்ள வேலை மற்றும் தொழில் வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்கிறார் இலங்கையின் தலைவர்.
பல்வேறு மொழிகள் அழிந்து வரும் சூழலில் ஒரு மொழி தன்னை காப்பாற்றிக் கொண்டு, பரிணமிக்க வேண்டும் எனில் அது வர்த்தகம் ஆக்கப்பட வேண்டும், அதன் மூலம் கலையியல் மற்றும் காசு பார்க்கும் ஒரு வாய்ப்பும் இருக்க வேண்டும் என இதற்கு முன்னர் சில தருணங்களில் எழுதி இருக்கிறேன். அது தான் தற்போது தமிழ் மொழிக்கு, தமிழ்நாட்டு மக்களின் பொருளாதார வளர்ச்சி மூலம் ஏற்படுகிறது. இது ஒரு நல்ல வளர்ச்சியின் அடையாளம்.
இதை நான் எழுதிக் கொண்டு இருக்கும் போது தமிழ்நாட்டின் நாகப்பட்டணத்தில் இருந்து யாழ்பாணத்திற்கு 4 மணி நேர விரைவு கப்பல் போக்குவரத்துக்கு ஆரம்பித்து விட்டது. இந்தப் படகு வோல்வோ பேருந்து போல சொகுசுடன் இருப்பது சிறப்பு அம்சம். அதே போல சென்னையில் இருந்து சொகுசு கப்பல் திருகோணமலைக்கும், ஜாப்னாவிற்கும், அம்பன்தோட்டாவிற்கும் இன்பச் சுற்றுலா (cruise) செல்ல ஆரம்பித்து விட்டார்கள். இதன் வசதிகள் ஆச்சரியப்பட வைக்கிறது. கீழே இணைப்புகள் கொடுத்து இருக்கிறேன், பார்த்துக் கொள்ளுங்கள்.
எனக்குத் தெரிந்த நடிகர் ஒருவர் காலை விமானத்தில் ஏறி கொழும்பு சென்று கேசினோவில் விளையாடிவிட்டு இரவு சென்னைக்கு வீடு திரும்புகிறார். எனக்குத் தெரிந்த ஒரு துடிப்பான தமிழ்நாட்டு இளம் தொழில் அதிபர் இலங்கையின் சதுப்பு நிலக்காடுகளை புனரமைக்கும் ஒரு மிகப்பெரும் திட்டத்தை, அங்குள்ளவர்களுக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் ஒரு திட்டமாகவும் செயல்படுத்த ஆரம்பித்து விட்டார். ஊட்டி கொடைக்கானல் உல்லாச சுற்றுலா வந்தவர்களுக்கு ஒரு "ஃபாரின் டூர்" வாய்ப்பாக இலங்கை அமையப் போகிறது.
தமிழ்நாட்டின் தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுர மாவட்டக்காரர்களுக்கு 100 ஆண்டுகளுக்கு முன்பு சென்னை செல்வதைப் போல கொழும்புவும் இன்னொரு பக்கத்து நகரமாக விளங்கியது இங்கு நினைவு கூறத்தக்கது. எங்கள் ஊரில் இருந்து அங்கே சென்று மரக்கடை வைத்தவர்கள் உண்டு, வைத்து கொஞ்சம் சம்பாதித்து விட்டு நாடு திரும்பியவர்களும் உண்டு. வரலாறு மீண்டும் மீட்டுருவாக்கம் பெறுகிறது.
இது போன்ற வாய்ப்புகளை, பொருளாதாரத்தில் திடம் பெற்று இருந்தாலும், புலம் பெயர்ந்த ஈழத்து தமிழர்கள் இன்றளவும் பயன்படுத்திக் கொள்ளாமல் இருக்கின்றனர். அவர்கள் தவற விட்டுக் கொண்டு இருக்கும் இன்னொரு பொன்னான வாய்ப்பு இது. ராஜஸ்தானில் இருந்தும் குசராத்தில் இருந்தும் தொழில் அதிபர்கள் யாழ்பாணத்தில் கடை போடுவதற்கு முன்னர் நம்ம ஊர்க்காரர்கள் முந்திக் கொள்கிறார்களா எனப் பார்க்கலாம்.
தமிழ்நாட்டின் வர்த்தகமும் வேலை வாய்ப்பும் தற்போது நலிவுற்று இருக்கும் இலங்கைப் பொருளாதாரத்திற்கு ஒரு உந்து சக்தியாக திகழட்டும். இந்த வாய்ப்புகள் தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்கும், தமிழுக்கும் சிங்களத்திற்கும் ஒரு சகோதரப் பாசத்தை வழங்கினால் மகிழ்ச்சியே.
ராதா மனோகர் : இலங்கையும் தமிழ்நாடும் ஒரு பலம் வாய்ந்த பொருளாதார மண்டலமாகும்
புலம்பெயர்ந்த பலர் இன்னும் ஒரு பங்கர் மனோநிலையில்தான் இருக்கிறாரகள்.
தமிழர்கள் மீதான புலிகளின் வன்முறையற்ற கொலைக்கலாச்சாரமானது தமிழர்களை ஒரு சமூகமாக மீளமைப்பதற்கு பெரும் தடையாகவே இன்னும் உள்ளது.
தற்போது தமிழகத்தில் இருந்து இலங்கைக்கு தாராளமாக மக்கள் சென்று வருவது காலத்தின் கட்டாயம்.
வரலாறு முழுவதும் இந்த பிணைப்பு இருக்கிறது
மாறாக புலி ஆதரவாளர்களுக்கும் சாதாரண மக்களுக்கும் இடையில் ஒரு மோசமான கசப்புணர்வு இன்றும் ஓரளவு உள்ளது
அவர்களின் துரோஹிஸ கொலை வரலாறு அவ்வளவு கொடூரமானது.
பல புலம்பெயர் புலி ஆதரவாளர்களுக்கு இதுதான் தற்போதுள்ள கசப்பு மாத்திரை.
மேலும் சிங்களவர்கள் பெரும்பாலும் தமிழ் சமண பௌத்தர்கள்தான்
சைவ கழுவேற்றிகளின் கொலைவெறியாட்டத்தில் இருந்து தப்பி இலங்கைக்கு ஓடி தங்களை தற்காத்து கொண்டவர்கள்.
ஒவ்வொரு சிங்களவர்களுக்கும் தமிழ்நாடு மீது ஒரு ஆழமான உணர்வு இருக்கிறது
இதை எப்படியாவது சிதைத்து விடவேண்டும் என்று வெறுப்பு அரசியல்வாதிகள் கடும் முயற்சி செய்வதும் உண்மைதான்
ஆனால் காலம் இப்போது மக்கள் பக்கம் நிற்கிறது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக