ஞாயிறு, 18 ஆகஸ்ட், 2024

நெல்லை கண்ணன் காமராஜரை புகழ்வதை போல கலைஞரை மறைமுகமாக தாக்குவார்.

No photo description available.

ராஜா ஜி  : கர்மவீரர் காமராஜரைப் பற்றி தொடர்ந்து மேடையில் பேசிவந்த ஒரே ஆளுமை நம்ம தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் மட்டுமே!
10 வருடங்கள் முன்பு முகநூலில் அவற்றைக் கண்டதும் திடுக்கிட்டேன்...
எனக்கு நன்றாகத் தெரியும் காமராஜரைப் பற்றி நெல்லை கண்ணன் மட்டுமே மேடைகளில் தொடர்ந்து பேசி வந்தவர்..
கையில் மைக் கிடைக்கும் போதெல்லாம் காமராஜரைப் புகழ்வார்..
நெல்லை கண்ணனுக்கு அவ்வளவு ஆர்வம் என்று நமக்குத் தோனும்..
அரசியல் தொடர்பற்ற இலக்கிய மேடைகளில், கூட்டங்களில் என்று கிடைக்கும் இடங்களில் எல்லாம் காமராஜரைப் பேசுவார்..
இதில் முக்கியமான ஒன்று..
ஒவ்வொரு பாராட்டுக்குப் பின்பும் கலைஞரை மறைமுகமாக குற்றம் சாட்டுவார்.. காமராஜரைப் புகழ்ந்தது கலைஞரை இகழத்தானோ என்று தோன்றும்.. ஆனால் திமுகவினர் கூட அதை ரசித்துக் கேட்பார்கள்..
வலைத்தளங்களின் ஆதிக்கமும் வாட்சப்பும் வந்த பின்பு சங்கிகள்,  பாஜகவினர், நாம் தமிழர் போன்றோர் நம்முடைய நெல்லைக் கண்ணன் ஆங்காங்கே தூவிய காமராஜரின் புகழ்ப் பாடலை..
முழு ரைட்டப்பாக எழுதி வந்தார்கள்..


இப்படித்தான் ஒருமுறை காமராஜர் தெருவில் நடக்கும்போது, காரில் போகும்போது, நேருவை சந்தித்தபோது, மாணவனை சந்தித்தபோது என்று ரைட்டப்புகள் தொடரும்..
இதையே தொடக்கமாக வைத்து ஒட்டுமொத்த திமுகவுக்கு எதிரானோரும் காமராஜரை புகழ்வது அப்படியே கலைஞரை இகழ்வது என்று பரப்பத் தொடங்கினார்கள்..
தமிழ்க்கடல் நெல்லை கண்ணன் சுனாமி போல் இலக்கிய அலை பொங்க பேசியதையோ, நடிகர் திலகம் வசனங்களை பேசுவதுபோல் அகநானூறு புறநானூறு பாடல்களை ஒப்பிப்பார்...
திடீரென தேவாரம் திருவாசகம் பாடுவார்...
இவற்றில் ஒன்றைக்கூட யாருமே பின்பற்றவில்லை..
நமக்கு தமிழ்க் கடல் நெல்லை கண்ணன்..
திமுகவின் எதிரிகளுக்கு கண்டன்ட் குடோன் அவ்வளவுதான்!
இவர் வார்த்தைகளை தனதாக்கி திமுகவினரைத் தாக்கிய எவருமே இவருக்கு இரங்கல் கூட சொல்லமாட்டார்கள்..
2019 நாடாளுமன்ற பரப்புரை வரை திமுகவுக்கு எதிராக அல்லது புறக்கணிப்பாகவே இருந்தார்.. வைகோ, திருமா போன்றோரின் கூட்டணி காரணமாகவே திமுகமீது பற்றாக நடந்து கொண்டார்..
நாங்கள் அவரை எப்போதுமே அவர் பேச்சை விட, அவரின் தமிழ்மீது கொண்ட பற்றால் கொண்டாடவே செய்தோம், செய்கிறோம், செய்வோம்..
2016 தேர்தல் சமயத்திலாவது கலைஞரோடு நட்பு பாராட்டி இருக்கலாம் என்று 2019 சமயத்தில் நினைத்தேன்..
குறிப்பு : வாட்சப் ரைட்டப்புகளுக்கு பட்டிமன்ற பேச்சாளர்கள் வந்ததும் இவர் பழையபடி பேசியதை நிறுத்திக்கொண்டார்..
இவராவது காமராஜரிடம் பழகியவர்  மன்றத்து ஆட்களான சுகி.சிவம், பாரதி பாஸ்கர், சுமதி என்ற பட்டியல் கூட காமராஜரின் உடன் பயணித்தது போலவே பேசுவார்கள் .. அந்த கண்ட்ன்ட் எல்லாமே திமுக எதிர்ப்புக்காக மட்டுமே பயன்படும்..
இந்த பதிவை நாளைக்கு எழுதினால் நானே அழித்து விடுவேன்.. இந்த படம் ஒருநாள் மட்டுமே!
- மீள்வாசிப்பு
தமிழ்க் கடல் நெல்லை கண்ணனுக்கு இரண்டாம் ஆண்டு நினைவு நாள்..

கற்றது கையளவு :   நெல்லை கண்ணன் கொஞ்சம் மதிமுக பற்றுள்ளவர்.
காமராஜரை புகழ்வதை போல லைட்டாக கலைஞரை மறைமுகமாக தாக்குவார்.
கடைசி காலத்தில் திமுகவிடம் சரணடைந்தார். சங்கிகள் நெல்லை கண்ணனை கறிவேப்பிலை போல தான் பயன்படுத்தினர்.
இதே டெம்ப்ளேட் வைத்து தான் தமிழருவி மணியனை சங்கிகள் ஊறுகாய் போல தொட்டு கொள்கிறார்கள்.
பாரதி பாஸ்கர் முழு சங்கி தான். நமக்கு தான் அதை புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் ஆனது.
எனக்கு என்னமோ சுகிசிவம் ஆன்மீகத்தை தாண்டி வேறு கருத்துகளை பேசியதாக தெரியவில்லை. சமீப காலமாக, குறிப்பாக எப்போது சங்கிகள் அவரை தாக்க ஆரம்பித்தார்களோ, அப்போதிருந்தே அவர் திராவிட கருத்துகளை பேச ஆரம்பித்தார்.

ராஜா ஜி  :  கற்றது கையளவு ஆன்மீகத்தில் சீர்திருத்தம் பேசும் சுகிசிவம் இப்போது சங்கிகளால் தா க்கப்படுகிறார்.
இதனால் சுகிசிவத்துக்கு இழப்பு தான்.
ஆனாலும் உண்மையை பேசுகிறார்.
இந்த அச்சம்தான் சங்கிகளுக்கு சாதகமா இருக்குது.

கருத்துகள் இல்லை: