புதன், 21 ஆகஸ்ட், 2024

ஆரியமயம் - தமிழகத்தில் பல்லவர் காலத்தில் தொடங்கி சோழர்கள் காலத்தில் உச்சம் பெற்று , நாயக்கர்கள் காலத்தில் முற்று முழுதானது

 பிரஜாபதி ;  தமிழகம் பார்ப்பன மயம் ஆனது பல்லவர் காலத்தில் தொடங்கியது, சோழர்கள் காலத்தில் உச்சம் பெற்றது, நாயக்கர்கள் காலத்தில் முழுதும் பார்ப்பன மயம் ஆக்கப்பட்டுவிட்டது.
முதலில் தமிழில் பாடப்பட்டு வந்த தேவாரம் திருவாசகம் போன்ற சைவம் ஓரம் கட்டப்பட்டு - இராமாயணமும், மகாபாரதமும் மக்களிடம் பரப்பப்பட்டது.
கல்வி அறிவு மறுக்கப்பட்டதால் கூத்துகள், கதாகாலட்சேபம் (சொற்பொழிவு) மூலம் விடிய விடிய போதிக்கப்பட்டு நமது மூளையில் திணிக்கப்பட்டது!
இந்த பணிக்காகத்தான் வடக்கிலிருந்த ஆரியர்கள் வரவழைக்கப்பட்டார்கள்.
பரப்புரைக்கு கூலியாக:
இறையீலி மங்களங்கள் என்ற பெயரில் நமது நிலங்கள் பிடுங்கப்பட்டு பார்ப்பனர்களுக்கு வழங்கப்பட்டது.
புராணங்கள், இதிகாசங்கள் வாயிலாக மனுதர்மமும், வர்ணாசிரம பேதமும் நம்மை ஆட்கொண்டது, நமது கடவுள்களை வைத்தே நம்மை அடிமைப்படுத்தும் கதைகள் மூலமாக ஆழமாக வேரூண்றியது பார்ப்பனீயம்.


மனுநீதி தவறாமல் ஆள்வது மட்டுமே அரசன் பணி என அரசர்களும் ஏற்றுக்கொண்டார்கள்!
மக்களும் ஏற்றுக்கொண்டார்கள்.
திராவிடர் இயக்கங்கள் வரும் வரை இந்த மூளை சலவை நமக்கு தெரியவேயில்லை!
பார்ப்பனீயம் பரவிய அதே வழிமுறையில்தான் திராவிட இயக்கங்கள் வளர்ந்தது! இயக்கங்கள் வந்து சொல்லும்வரை இந்த நுட்பம் புரியாமலேயே அடிமைப்பட்டுக் கிடந்தோம்.
மீண்டும் இப்போது சோழர்கள் காலம் தலை தூக்குகிறது,  நாம் மீண்டும் ஆரம்பிக்கவேண்டிய காலத்தில் தள்ளப்பட்டுள்ளோம்.
பெரியாரும் அண்ணாவும் அவர்களின்  தளகர்த்தகர்களும் செய்ததையே நாமும் செய்யவேண்டிய காலத்தில் இருக்கிறோம். செய்வோம், செய்துகொண்டே இருப்போம்.

கருத்துகள் இல்லை: