புதன், 3 ஏப்ரல், 2024

62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக , மற்றும் இந்துத்வ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாம்.

May be an image of ‎1 person and ‎text that says '‎THE NEW INDIAN EXPRESS NATION WORLD STATES CITIES Nation Centre hands over 62 percent of new Sainik Schools to Sangh Parivar BJP leaders: Report In 2021, the Union government opened doors for private players to run Sainik Schools. In their annual budget that year, the government announced plans to set up 100 new Sainik Schools across India. check חיי foooe‎'‎‎

Vasu Sumathi : மாணவர்களை இந்திய ராணுவத்தில் சேரத் தயார்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு கடந்த 1961-ம் ஆண்டு முதல் நாடு முழுவதும் சுமார் 33 சைனிக் பள்ளிகள் கட்டப்பட்டு ஒன்றிய அரசின் கீழ் செயல்பட்டு வந்தது.
இந்த சூழலில், கடந்த 2021-ல் புதிய கொள்கை ஒன்றை உருவாக்கிய ஒன்றிய அரசு,
தனியார் பங்களிப்போடு நாடு முழுவதும் மேலும் 100 புதிய சைனிக் ராணுவப் பள்ளிகள் அமைக்க திட்டமிட்டது.
அந்தத் திட்டத்தின் கீழ், இதுவரை 40 தனியார் பள்ளிகளுடன் சைனிக் பள்ளிகளை அமைக்க ஒன்றிய அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
இவர்கள் ஏதாவது புதிய திட்டம் என்றாலே இதில் மக்கள் நலம் இருக்காது. அவர்கள் மக்கள் நலம்தான் பிரதானமாக இருக்கும் என்பது எல்லோரும் அறிந்ததே.


இப்போது பூனைகுட்டி வெளியே வந்துள்ளது.
இதில் சுமார் 62 சதவீத தனியார் சைனிக் பள்ளிகள் சங்பரிவார், பாஜக நிர்வாகிகள், மற்றும் பிற இந்துத்வ அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு சொந்தமானதாம்.
இந்த 40 புதிய சைனிக் பள்ளிகளில், 10 பள்ளிகள் பாஜக நிர்வாகிகளுக்கும், 8 பள்ளிகள் RSS நிர்வாகிகளுக்கும்,
6 பள்ளிகள் பிற இந்து அமைப்பினர்களுக்கும் தாரை வார்த்திருக்கிறார்கள் என்று The Reporters Collective செய்தி நிறுவனம் RTI மூலம் கண்டு பிடித்திருக்கிறது.

கிறிஸ்தவம், இஸ்லாம் உள்ளிட்ட இந்தியாவின் எந்தவொரு மத சிறுபான்மையின அமைப்புகளுக்கும் இதுவரை சைனிக் பள்ளிகளை நடத்தும் அங்கீகாரம் வழங்கப்படவில்லை.

இதற்கு அரசாங்கம் ஒவ்வொரு பள்ளிக்கும் சராசரியாக, 6ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரை, 1.2கோடி வரை வருடந்திர கட்டண ஆதரவையும்,
10 லட்சம் வரை பயிற்சிக்கான நிதி ஆதரவையும் வழங்குகிறது.

அரசாங்க ஆதரவு மற்றும் ஊக்குவிப்பு ஒரு புறம் இருந்தபோதிலும், இந்த பள்ளிகளில் வருடாந்திரக் கட்டணம் ரூ. 13,800 முதல் ரூ. 2,47,900 வரை என்று The reporters collective கண்டுபிடித்திருக்கிறது.
ஒன்றிய அரசின் புதிய கொள்கை மாற்றங்களால் சைனிக் ராணுவப் பள்ளிகளை நடத்தும் உரிமம் கருத்தியல் ரீதியாக ஒரு மதத்தை சேர்ந்த தனியார் நிறுவனங்களுக்கு மட்டும் வழங்கப்படுவது பல்வேறு கவலைகளை எழுப்புவதாக The Reporters Collective கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை: