புதன், 22 பிப்ரவரி, 2023

ரூபா ஐபிஎஸ், ரோஹினி ஐஏஎஸ் இருவரும் இடமாற்றம். ஐஏஎஸ் அதிகாரி ரோஹிணியின் அந்தரங்கப் படங்களை வெளியிட்ட ரூபா ஐபிஎஸ்

 tamil.asianetnews.co - Pothy Raj :பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூர், ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆகியோர் பொறுப்பு ஏதும் இல்லாமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பேஸ்புக்கில் தனிப்பட்ட படங்களை பகிர்ந்து மோதலில் ஈடுபட்டுள்ள பெண் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினி சிந்தூர், ஐபிஎஸ் அதிகாரி ரூபா ஆகியோர் பொறுப்பு ஏதும் இல்லாமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு பரப்பனஅக்ரஹார சிறையில் சசிகலா, இளவரசி இருந்தபோது,
அவர்களுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை வெளிச்சத்துக்குகொண்டு வந்தவர் ரூபா
மாநில கைவினை மேம்பாட்டுக் கழக இயக்குநராக ரூபா இருந்தார்.
கர்நாடக மாநில இந்து சமய அறநிலையத்துறை இயக்குநராக இருந்தவர் ரோஹினி சிந்தூரி. இருபெண் அதிகாரிகளுக்கும் இடையே சிலஆண்டுகளாக லேசான உரசல் இருந்தாலும் அது பெரிதாக வெளியே தெரியவில்லை.

இந்நிலையில் ஐஏஎஸ் அதிகாரி ரோஹினிக்கு எதிராக ஐபிஎஸ் அதிகாரி ரூபா, பேஸ்புக்கில், ரோஹினியின் தனிப்பட்ட புகைப்படங்களைப் பதிவிட்டது இருவரின் மோதலை உச்சத்துக்கு கொண்டு வந்துள்ளது.

இரு பெண் உயர் அதிகாரிகளுக்கும் இடையிலான மோதல் கர்நாடக அரசிலும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. சட்டசபை நடக்கும் நேரத்தில் இந்த மோதல் வெளியாகி இருப்பது ஆட்சியாளர்களுக்கு பெரிய சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக முதல்வர் பசவராஜ் பொம்மையும் அதிகாரிகள் மோதல் குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளார்.

'சந்திரயான்-3' ஜூன் மாதம் விண்ணில் செலுத்தப்படலாம்: இஸ்ரோ நம்பிக்கை

இதற்கிடையே ஐபிஎஸ் ரூபா, ஐஏஎஸ் ரோஹினி இருவரும் ஒருவர் மீதுஒருவர் போலீஸில் புகார் அளித்துள்ளனர். இதில் ஐபிஎஸ்ரூபாவின் கணவர் முனுஷி முத்கிலும் ஐஏஎஸ் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது.

இரு பெண் அதிகாரிகள் இடையிலான மோதல் கர்நாடக அரசியலில் பெரும் விவாதப் பொருளாக மாறிவிட்டநிலையில் இருவருக்கும் பொறுப்பு ஏதும் வழங்காமல் இடமாற்றம் செய்து கர்நாடக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.

இதில் ஐபிஎஸ் அதிகாரி ரூபாவின் கணவர் ஐஏஎஸ் அதிகாரி முனி்ஷ் முத்கில்
சர்வே மற்றும் நிலஅளவியல் துறை ஆணையராக இருந்தார். அவர் பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தப் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார். சர்வே மற்றும் நிலஅளவியல் துறை ஆணையராக சிஎன் ஸ்ரீதரா நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்து சமயஅறநிலையத்துறை ஆணையராக இருந்த ரோஹினி சிந்தூரி தசரி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக திறன் மேம்பாட்டு மற்றும் தொழில்முனைவோர் இணை இயக்குநராக இருந்த பசவராஜேந்திரா நியமிக்கப்பட்டுள்ளார்.

மாநில கைவினை மேம்பாட்டுக் கழகத்தின் இயக்குநராக இருந்த ஐபிஎஸ் அதிகாரி ரூபா இடமாற்றம் செய்யப்பட்டு அவருக்குப் பதிலாக டி பாரதி ஐஏஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.
 

கருத்துகள் இல்லை: