சனி, 25 பிப்ரவரி, 2023

தேர்தல் நடக்கும் நேரத்தில் அதிமுக வழக்கில் தீர்ப்பு வழங்கலாமா?

 Kandasamy Mariyappan :  திமுக செய்யும் தவறுகளை ஏன் நீ பெரிதாக கண்டித்து எழுதுவதில்லை என்று எனது பல நண்பர்கள் என்னிடம் கேட்பதுண்டு.!
ஒரே காரணம் மட்டுமே.....
திமுக வெற்றிபெற திமுக மட்டுமே உழைக்க வேண்டும், அதுவும் திமுக தலைவர் மற்றும் உயர்மட்ட தலைவர்கள் மட்டுமே உழைக்க வேண்டும்.!
ஆனால் அதிமுக வெற்றிபெற, அதிமுக அதிகமாக உழைக்க வேண்டிய முக்கியமே இல்லை.!
அதிமுக வெற்றிக்கு Election Commission, IT Dept, ED Dept, CBI Dept, RAW, High Court, Supreme Court, Parliament, Union Government, Governor, ஊடகங்கள் ஒருபுறம் உழைக்க.,
பார்ப்பண, பறையர் போன்ற சாதி இயக்கங்கள், கிறித்துவ, இசுலாமிய மத இயக்கம் போன்ற சமூக இயக்கங்கள் மற்றொருபுறம் உழைப்பார்கள்.!
2016 தேர்தலில் செல்வி. ஜெயலலிதா பிச்சாரம் செய்தது 5 இடங்களில் மட்டுமே.!
ஆனால் 2016 அதிமுக வெற்றிக்காக உழைத்தவர்கள் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், மதிமுக, விசிக, தேமுதிக, நாம் தமிழர், பாமக, பாஜக, வாசன், இசுலாமிய கட்சிகள் போன்ற அரசியல் கட்சிகள்...
அனைத்து ஊடகங்கள், சாதிய, மத இயக்கங்கள் உழைத்ததே அதிகம்.!


ஆளுங்கட்சியாக இருந்து கொண்டு, கூட்டணி கட்சி போட்டியிடும் ஈரோடு இடைத்தேர்தலுக்கு இவ்வளவு பணம் செலவு செய்ய வேண்டுமா என்பதற்கான பதில்தான் நேற்றைய உச்சநீதிமன்ற தீர்ப்பு.!
எங்கேயாவது தேர்தல் நடக்கும் நேரத்தில், தேர்தலில் போட்டியிடும் கட்சியின் வழக்கிற்கு தீர்ப்பு வழங்குவார்களா.!
இந்திய ஒன்றியத்தின் உச்சநீதிமன்றம் செய்யும்.!
இந்த தீர்ப்பின் மூலமாக திரு. பழனிச்சாமியை வலுவான தலைவராக சித்தரித்து, திரு. பன்னீர்செல்வம், திரு. தினகரன், திருமதி. சசிகலா ஆதரவாளர்களை திரு. பழனிச்சாமி பக்கம் திருப்பி விட்டு மரியாதை குறைவில்லாத தோல்வியை தழுவ வைக்க உச்சநீதிமன்றம் முயற்சி எடுத்துள்ளது.!
ஜனநாயகத்தை திமுகவிடம் மட்டுமே எதிர்பார்த்தால்...
நாம் ஃபாசிசத்தால் மீண்டும் ஒடுக்கப்படுவோம்.!

கருத்துகள் இல்லை: