செவ்வாய், 21 பிப்ரவரி, 2023

வோல்க்ஸ் வேகன் கார் காப்பி அடித்த வரலாறு செக்கோஸ்லாவாக்கியாவில் டட்ரா T 197 கார்

ராதா மனோகர்:  1934 இல்  செக்கோஸ்லாவாக்கியாவில் டட்ரா  T 197 என்ற மோட்டார் கார் உருவாக்கப்பட்டது
இந்த மாடல் கார்கள் சுமார் ஐந்நூறு உற்பத்தியானது. இதில் என்ன பெரிய சுவாரசியம் இருக்கிறது என்று நீங்கள் எண்ணக்கூடும்
மோட்டார் கார் உற்பத்தியில் இது ஒரு முக்கியமான செய்தி
இந்த காரை காப்பி அடித்துதான் ஹிட்லரின் ஜெர்மனியில் வோல்க்ஸ் வாகன் காரை வடிவமைத்து உற்பத்தி செய்தார்கள்.
இந்த டட்ரா காரை கண்ட ஹிட்லர் இந்த கார்தான் எனது நாட்டுக்கு தற்போது மிக தேவையான வண்டி என்று கூறிய ஹிட்லர் அப்படியே அதன் அத்தனை அம்சங்களையும் காப்பி அடித்து வோல்க்ஸ் வாகன் கார் உற்பத்தி செய்ய உதவினார்
ஏர் கூலிங் எஞ்சின் . பின்பக்கமாக பொருத்தப்பட்ட விதம் எல்லாவற்றையும் விட டட்ரா T 197 பாடி அமைப்பு அப்படியே வோல்க்ஸ் வேகன் காப்பி அடித்து உருவாக்க பட்டிருந்தது இந்த வோல்க்ஸ் வாகன் கார் உற்பத்தியாளரான  Ferdinand Porsche மீது டட்ரா கம்பனி  வழக்கு தொடர்ந்தது
தங்கள் டாட்ரா காரின் வடிமைப்பை ஜெர்மனி கம்பனி திருடி விட்டதாக குற்றம் சுமத்தினார்கள்
சட்டரீதியான சமரசத்திற்கு வோல்க்ஸ்வாகன் கம்பனியின் தலைவர் Ferdinand Porsche தயாராகவே இருந்தார்

ஆனால் இந்த சமரசம் எல்லாம் தேவையில்லை டட்ரா வை எப்படி டீல் செய்யவேண்டும் என்று எனக்கு தெரியும் என்று கூறிய ஹிட்லர் செக்கோஸ்லாவாக்கியா மீது போர்தொடுத்து அந்நாட்டை அடிமை கொண்டார் .
அத்தோடு அந்த வழக்கும் காணாமல் போனது
இந்த வோல்க்ஸ் வாகன் கார் உற்பத்தியான செய்தி மற்றும் அதன் மேன்மை பற்றி இன்றளவும் பல கட்டுக்கதைகள் உலாவருகிறது
ஹிட்லரின் மகிமைகளில் இதுவும் ஒன்றாக பலர் பேசுவதை கேட்கலாம்
இது ஒரு பச்சை திருட்டு
பாசிசவாதிகள் எல்லோரும் இது போன்ற பொய் பித்தலாட்ட தலைவர்கள்தான்
பாசிஸ்டுகள் அத்தனை பெருமைகளின் பின்னும் ஒழிந்திருப்பது இதுபோன்ற மோசடிகள்தான்
Tatra T97 | Predecessor of Tatraplan T600 was axed by the Na… | Flickr

கருத்துகள் இல்லை: