புதன், 20 ஜூலை, 2022

"ரணில்" நோபல் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட (1989) ஒரே இலங்கையர்.. 15 வயதில் ஜப்பானிய மொழியில் ஜப்பானிய நாடாளுமன்றத்தில் ...

May be an image of 1 person and text that says 'யார் இந்த ரணில்'

Anparasi Arulchelvan  :  தோல்விகளை வெற்றியாக்கும்  இராஜதந்திரி இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பற்றிய சிறு தொகுப்பு
*உலகத் தலைவர்களால் மரியாதையாக பார்க்கப்படும் இலங்கையின் தலைவர்களில் ஒருவர்.
*அரசியலில் தோல்வியின் நாயகன் என பலராலும் பேசப்பட்டவர்.
*இலங்கையின் எட்டாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி.
*இலங்கையின் பிரதான கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர்.
*கட்சியில் ஒரே ஒரு உறுப்பினராக தேசியப் பட்டியல் மூலம்பாராளுமன்றம் சென்று பிரதமராக, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகி சாதனை படைத்தவர்.
*அதிகப்படியான கல்வித்தகமை கொண்ட இலங்கையின் ஜனாதிபதி
* SSC (தற்போதைய O/L பரீட்சை ) பரீட்சையில் இலங்கையில் 02ம் இடம் பெற்றவர்.


*HSC (தற்போதைய A/L பரீட்சை) பரீட்சையில் இலங்கையில் 07வது இடம்  பெற்றவர்.
* கொழும்பு ரோயல் கல்லூரி விவாதக் குழு மற்றும் நாடகக் குழுவின் தலைவர்.  
*இலங்கை சட்டக் கல்லூரியின் முதலாவது பரிஸ்டர் பட்டம் பெற்றவர்.
* ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் தொடர்பான முதுகலைப்பட்டம் பெற்றவர்.
* 15 வயதில் ஐக்கிய நாடுகள் சபையில் உரையாற்றிய உலகின் ஒரே மனிதர்.
* ஜப்பான் பாராளுமன்றத்தில் ஜப்பான் மொழியில் உரையாற்றிய உலகின் ஒரே ஒரு வெளிநாட்டு அரச தலைவர்.
*இலங்கையின் வயது குறைந்த முதலாவது அமைச்சர்.
*உலகின் கல்வியறிவுள்ள அமைச்சர்களுக்காக வழங்கப்படும் “ பிலென் டி ஒர் “ விருதை இரண்டு தடவைகள் பெற்ற ஒரேயொரு இலங்கை அரசியல்வாதி.  
* 1989 இல் “ நொபெல் “ விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட முதலாவது இலங்கையர்.
* இலங்கைக்கு இணையத்தளத்தை அறிமுகப்படுத்தியவர்
* இலங்கைக்கு கையடக்கத் தொலைபேசியை அறிமுகப்படுத்தியவர்
* இளைஞர்கள் சேவைகள் மன்றத்தை ஆரம்பித்தவர்
* அறநெறிக் கல்விக்கு வித்திட்டவர்
* கல்வியற் கல்லூரிகளை ஆரம்பித்தவர் ( college of education )
* இலங்கையில் அதிக தடவைகள் பிரதமராக இருந்தவர்
* போட்டிப் பரீட்சை மூலம் ஆசிரியர் நியமனம் வழங்கலை ஆரம்பித்தவர்
* இலங்கையில் க.பொ.த (சா/த) , க.பொ.த (உ/த) பரீட்சைகளை அறிமுகம் செய்தவர்
* இலவசப் பாடப்புத்தகங்களை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்தவர்
* நீண்ட காலத்தின் பின் A9 தரைவழிப் பாதையை திறக்க முன்னோடியாக இருந்தவர்.
24.03.1949 இல் பிறந்த ரணில் விக்கிரமசிங்க அரசியலில் அதிகப்படியான தோல்விகளை சந்தித்து இன்று வெற்றி வாகை சூடியுள்ளார்.இலங்கையின் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மிகவும் சவாலான சூழ்நிலையில் பதவியை ஏற்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை: