செவ்வாய், 31 மே, 2022

மலையக அரசியல்வாதிகளும் இடம்பெயரும் வாக்கு வங்கிகளும்

மலையானந்தன் :  கிளிநொச்சி முல்லைத்தீவு மன்னார் வவுனியா யாழ்ப்பாணம் மட்டக்களப்பு திருகோணமலை போன்ற வடக்கு கிழக்கு மாகாணங்களில்  குடிபெயர்ந்த மலையக மக்களின் வாழ்க்கை ஓரளவு வெற்றிகரமாக இருப்பதாகத்தான் தெரிகிறது
கொழும்பு கம்பஹா மாவட்டங்களுக்கு இடம்பெயர்ந்த மலையக மக்களின் வாழ்வும் கொஞ்சம் முன்னேற்றமாகதான் இருக்கிறது
ஆனால் மலையக அரசியல்வாதிகளுக்கு இப்படியாக மலையக மக்கள் இதர பகுதிகளுக்கு இடம்பெயர்வதில் விருப்பம் இல்லை என்றே தெரிகிறது
தங்களின் வாக்கு வாங்கி கரைந்து கொண்டு போவதை யிட்டு அவர்களுக்கு கடும் வேதனை இருப்பதாக எண்ணுகிறேன்
அதனால்தான் மலையக தனித் தேசிய இனம் என்ற  பிரசரத்தை அவிழ்த்து விடுகிறார்கள் போலும்


போர்க்காலங்களில் வடக்கு கிழக்கிற்கும் மலையகத்திற்கும் ஒரே விதமான அரசியல் கோட்பாடுகள் இல்லை என்று பெரும்பான்மை மக்களுக்கு தெரியப்படுத்தும் நோக்கத்தில் அப்போது இந்த தனி அடையாள கோரிக்கை பலராலும் முன்வைக்க பட்டது
ஆனால் இப்போது அந்த நிலைமை இல்லை
மேலும் குடிபெயர்ந்த மக்களுக்கு தங்களை இலங்கை தமிழர்களாகவே பெரிதும் கருதுகிறார்கள்
ஆனால் இல்லை இல்லை நீங்கள் இலங்கை தமிழர்கள் அல்ல   இப்போதும் மலையக மக்கள்தான் என்று இந்த அரசியல்வாதிகள் வகுப்பு எடுக்கிறார்கள்
எங்கே இந்த மக்கள் நிம்மதியாக இருந்து விடுவார்களோ என்ற பயம் பல மலையக அரசியல்வாதிகளை ஆட்டி படைக்கிறது என்று கருத இடமுண்டு
எல்லாமே வாக்குக்குத்தாண்டா ...பதவி என்ற பேராசைக்குதாண்டா

கருத்துகள் இல்லை: