செவ்வாய், 20 ஜூலை, 2021

அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் கவலைக்கிடம்! .. சந்திரலேகா ஆசிட் வீச்சு வழக்கில் கைது செய்யப்பட்டவர்

News18 Tamil : தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் மதுசூதனன் முக்கியமானவர்.
அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவராக திகழ்ந்து வருபவர் அவைத்தலைவராக இருந்து வரும் மதுசூதனன். கடந்த சில நாட்களுக்கு முன்னர் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. மூச்சுத்திணறல் ஏற்பட்டதையடுத்து மதுசூதனன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனின் உடல்நிலை கவலைக்கிடம் ஆகியிருப்பதாகவும் அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது..
அவருக்கு மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர், எனினும் அவரின் உடல்நிலை சீரடையவில்லை.அதிமுக அவைத்தலைவராக நீண்ட காலமாக இருந்து வருபவர் மதுசூதனன். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.

ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர் தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர் செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் மதுசூதனன் முக்கியமானவர்.

இதனிடையே மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ள மதுசூதனன் உடல்நிலை குறித்து அதிமுக தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் கேட்டறிந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
Published by:Arun

கருத்துகள் இல்லை: