செவ்வாய், 20 ஜூலை, 2021

பாகிஸ்தானில் பஸ்-லாரி மோதி விபத்து 30 பேர் பலி

 தினத்தந்தி : இஸ்லாமாபாத் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் டிரக்குடன் பயணிகள் பஸ் மோதியதில் 30 பேர் பலியானார்கள்  மற்றும் 40 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர் என்று உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில்  பயணிகள் பஸ்  ஒன்று சியால்கோட்டிலிருந்து ராஜன்பூருக்கு சென்று கொண்டிருந்தது.  தேரா காசி கானில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டு இருந்த போது பஸ் எதிர்பாரத விதமாக எதிரே வந்த ஒரு டிரக்  மீது பயணிகள் பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த பெண்கள் குழந்தைகள் உள்பட 30 பேர் பலியானார்கள். 40 க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். அவர்கள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனையில்  சேர்க்கப்பட்டு சிகிச்சைபெற்று வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: