திங்கள், 19 ஜூலை, 2021

சுட்டி யூடியூப் ஸ்டார் ரித்விக் ... சிம்புவின் படிப்பினைகள் .. தேவி சோமசுந்தரம்

 Devi Somasundaram  :  சிலம்பரசன்  என்கிற சிம்பு  ,இவர்  குழந்தைல இருந்தே  சினிமாவில் நடிப்பது  அறிவோம். சிம்புவை அவர் அப்பாவே  இயக்கினார்.
அந்த  படங்களில் சிம்பு acting perfection காக  டீ ஆர் சிம்புவை அதிகமா  கண்டித்தும் ,பனிஷ்மெண்ட்  தந்தும்  நடிக்க வைத்தார் .
டான்ஸ்  நல்லா  ஆட வில்லை என்பதால்  4  மணி நேரம் முட்டி போட்டு, வசனம்  சரியாக பேசவில்லை என்பதால்  சாப்பாடு தராமல் அடித்து ,திட்டி  துன்புறுத்திலாம் படம் எடுத்து உள்ளார் .
இதை  எல்லாம்  அவரே   கூறியுள்ளார் .
சிம்புவோட குழந்தை மனது அந்த  வன்முறைகளால் பாதிக்கப்பட்டதாலும் சின்ன  குழந்தையில் கிடைத்த ஓவர் அட்டென்ஷனாலும் ஏற்பட்ட பாதிப்பு தான்,
 அவர்   ஒரு ரூட்  மன நிலையாளரா  ஆக்கிவிட்டது .
அப்பா  மேல  கோபம், அதுல இருந்து  காப்பாற்றாத  அம்மா  மேல  கோபம் , இவை  எல்லாம்  சொல் பேச்சு  கேக்காத அடாவடிகாரரா மாறிவிட்டார் .
தொடர்ந்து  அந்த  குணத்தால் சக  பெண் தோழிகளிடம் அவரால்  ஈர்ப்பை பெற  இயலாமல்  தோல்வி,  அதனால் மேலும்  கோபம்னு  தொடர்ந்து  அவர்  ஒரு தனிமை, பயம், அதை கையாள  பக்தி, சன்னியாசி கோலம்னு தொடர்  பாதிப்புக்குள்ளானார் .இப்ப  மெதுவா  அவற்றில் இருந்து மீண்டு வருகிறார் என்பது வேறு.
சிம்புவுக்கு நிகழ்ந்த குழந்தைகால பாதிப்பு  தான் அவரது தொடர்  பாதிப்புகளின் அடிப்படை . குழந்தை காலத்தில் பாதிக்கப்படும் எல்லாக் குழந்தையும்  சிம்பு மாதிரியே ஆகிவிடப் போவதில்லை என்றாலும் வாய்ப்புகள் அதிகம்.
நேற்று  ரித்திவிக் வீடியோகள் தொடர்பா, குழந்தையை  குழந்தையாய் இருக்க விடுங்கள்  என்று  ஒரு தரப்பும்,  அவர்களுக்கு எதிராய் ரித்விக்கிற்கு கிடைக்கும்  கவனிப்பால்  எழும் பொறாமைன்னு இன்னொரு தரப்பும்  பேசியது கண்ணில்  பட்டது .

குழந்தைகளை வைத்து படம், காட்சிகள்  எடுக்கவே  கூடாதுஎன்று  கூற இயலாது ..குழந்தைக்கான  படத்தை குழந்தை வைத்து  தான்  எடுக்க  இயலும் .ஆனால்  அது குழந்தையின் அடிப்படை உரிமை கடந்ததாக இருந்து விடக் கூடாது.
ஹாலிவுட் ல  குழந்தை வைத்து படம்  எடுக்க  இயக்குனருக்கு சிறப்பு பயிற்சி  உண்டு..தயாரிப்பாளருக்கும்  ,இயக்குனருக்கும் child actor guide ,child actor law எல்லாம் உண்டு ..அதை மீறி  படம்  எடுக்க முடியாது..
குழந்தைகள் adult content உள்ள கதையில்  நடிக்க வைக்கக் கூடாது, துன்புறுத்த கூடாதுன்னு ஏகப்பட்ட   விதிகள் உண்டு .அவற்றை  மீராமல்  குழந்தைகளை வைத்து வீடியோ எடுத்து  போடுவதில் தவறு இல்லை

நேற்று  behind wood சானல் பேட்டியில்  விளையாட்டா 10 நிமிட  வீடியோவுக்கு 10 மணி  நேர shoot ஆம்லன்னு நிருபர்  கேட்டதற்கு ரித்விக் ஆம் என்று  பதில் தந்தார் .10 மணி நேரம் 7 வயது குழந்தையை தொடர்ந்து டேக் என்பது கொஞ்சம் அதிக ஒர்க் டைம் தான் .அதோடு அதிக டேக் ல  அவர் அப்பா கோப மடைந்து திட்ட வாய்ப்புண்டு.
குழந்தை வைத்து எப்படி  படம் எடுக்க வேண்டும் என்று  ரித்விக் தந்தை அறிந்து  குழந்தையை கஷ்ட்டப்படுத்தாமல்  adult content இல்லாமல்  , ரிவிக்கிற்கு  அவரது நேரதிற்கான  ஊதியம் தரப்பட்டு  வீடியோ  எடுத்து போடட்டும் ..பாராட்டுவோம்.

அப்படி  இல்லாமல் சிம்பு  மாதிரி ரிக்விக் ஆகிடாம  பார்த்துக்க வேண்டிய அவசியம் இருக்கின்றது.
முன் பயிற்சி இல்லாமல்  காசுக்காக நடக்கும்   குழந்தையை கம்பில் அந்தரத்தில் ஆடவிடும்  ஹை டெக்  கழை கூத்தாடி ஆகிவிடாமல் இருந்தால் சரி 


கருத்துகள் இல்லை: