திங்கள், 19 ஜூலை, 2021

காஷ்மீர் மக்களின் தூதராக இருப்பேன்: இம்ரான் கான்

தினமலர் :இஸ்லாமாபாத்: ஆசாத் காஷ்மீர் பகுதியில் வரும் 25ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இதற்காக பாக்கிஸ்தான் பகுதியில் உள்ள ஆசாத் காஷ்மீரில்  தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட தெஹ்ரீப்-இ-இன்சாப் கட்சியின் தலைவரும், பாக்., பிரதமருமான இம்ரான் கான் பேசியதாவது:
பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் சித்தாந்தங்கள்தான் இந்தியாவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளன.
இந்த இரு அமைப்புகளின் சித்தாந்தங்கள் முஸ்லிம்களை மட்டும் இலக்காக வைக்கவில்லை.
சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், பட்டியலினத்தவர்களையும் குடிமக்களாக இவர்கள் கருதவில்லை.
கடந்த 2019ம் ஆண்டு ஆகஸ்ட் 5ம் தேதி ஜம்மு - காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அதிகாரம் 370வது பிரிவை பிரதமர் மோடி ரத்து செய்தது அட்டூழியம்.
சர்வதேச அளவில் காஷ்மீர் மக்களுக்காகவும், அவர்களின் போராட்டத்துக்காகவும் துணையாக நான் இருப்பேன். காஷ்மீர் மக்களின் தூதராக இருப்பேன். காஷ்மீர் விவகாரத்தை சர்வதேச அளவில் கொண்டு சென்று அந்த மக்களுக்கு ஆதரவாக இருப்பேன்.  இவ்வாறு அவர் தெரிவித்தார்.


கருத்துகள் இல்லை: