திங்கள், 19 ஜூலை, 2021

எப்படி இவ்வளவு Refund வருகிறது?

May be a meme of 1 person and text

Karthikeyan Fastura  :    எங்களது Intaxsevaவில் வாடிக்கையாளர்களுக்கு இவ்வளவு Refund வந்திருக்கிறது என்று சொல்லும்போது மீண்டும் மீண்டும் கேட்கப்படும் ஒரு கேள்வி எப்படி இவ்வளவு Refund வருகிறது? என்பதுதான்.
நீங்கள் கட்டாத தொகையை நாங்கள் Refund வாங்கித் தர முடியாது.
அதிக சம்பளம் வாங்கும் அனைவரும் அதிக வரி கட்டுவது இயல்பு என்று நினைத்து விடுகின்றனர். ஆனால் அதிகம் சம்பாதிக்கும் எந்த தொழிலதிபரும் அதிக வரி கட்டுவதில்லை.
அதற்கு அவர்களின் ஆடிட்டர்கள் தேவையான அளவு வழிகாட்டுகிறார்கள்.
ஆனால் நீங்கள் ஆடிட்டிங் நிறுவனத்திடம் நாம் செல்ல வேண்டியதில்லை என்று நீங்களே முடிவு செய்து விடுகிறீர்கள்.
உங்களது  நிறுவனம் தங்களது பணியாளர்களிடம் இருந்து வரியை பிடிக்கும்போது வரிவிலக்கு பகுதிகளை மிகக்குறைவாகவே கணக்கில் எடுத்துக்கொள்ளும்.


ஆனால் முறையாக கணக்கு தாக்கல் செய்யும்போது பல வழிகளில் வருவாய் பிரித்து காண்பிக்கப்பட்டு மீதவருவாய்க்கு மட்டும் வரி கணக்கிடும் போது மிகக்குறைவான வரிதான நாம் கட்ட வேண்டியிருக்கும். ஆகையால் அதற்கு அதிகமாக கட்டிய வரி நமக்கு ரீபண்ட்டாக திரும்பக் கிடைக்கும்.
வருமான வரி தாக்கல் பெரும்பாலோர் அறிந்த 80Cஐ தவிர்த்து பல பிரிவுகள் பல காரணங்களுக்காக பலதரப்பட்ட மக்களுக்காக உள்ளது. உதாரணத்திற்கு இன்சூரன்ஸ் முதலீட்டிற்கு கிடைக்கும் முதிர்வு தொகைக்கு வரி கிடையாது என்பதால் அவர்கள் வரி பிடிக்காமல் உங்கள் கணக்கில் செலுத்தலாம் ஆனால் நீங்கள் அதை அப்படியே கணக்கிட்டால் 10% முதல் 15% வரை வரியாக கட்ட வேண்டியிருக்கும். அதற்கென்று உள்ள செக்ஷனில் பிரித்து பதியும்போது அந்த Tax காணாமல் போய்விடும். அதேபோல ஒரு நிறுவனம் தங்கள் தொழிலை வளர்க்க வேண்டி பணியாளர்களுக்கு செலவிடும் தொகை சம்பளத்துடன் இணைத்துக் கொடுக்கலாம் ஆனால் அது நிறுவனத்தின் செலவு தானே தவிர ஊழியருக்கான கூலி அல்ல. ஆனால் அது உங்கள் கணக்கில் ஏறும்போது வரிப் பிடித்தம் நடக்கவே செய்யும். அப்போது அதை நாம் அந்தந்த பிரிவில் அந்தத் தொகை என்ன காரணத்திற்காக பெறப்பட்டது என்று குறிப்பிட்டு பதிவு செய்தால் சம்பளத்துடன் கணக்கிடப்படாது. அப்போது நீங்கள் கட்டிய வரியில் இருந்து விலக்கு கிடைக்கும்.
இப்படி பல காரணங்கள் வாய்ப்புகள் நமக்கு வழங்கப்படுகின்றது. ஆனால் அவற்றை அதன் புரிதல் இல்லாமல் பதிவு செய்யும்போது உங்களுக்கு நியாயமாக கிடைக்க வேண்டிய ரீபண்ட் பணம் கிடைக்காது. இங்கு பலர் அந்த தவறை தான் செய்கிறார்கள். நாங்கள் அவர்களுக்கு உதவுகிறோம். வருமான வரித்துறை கொடுத்திருக்கும் அனைத்து வாய்ப்புகளையும் நன்கு புரிந்து அறிந்து வைத்திருக்கிறோம். அவற்றை பல கணக்குகள் வாயிலாக சோதித்து இருக்கிறோம். கணக்கியல் வல்லுநர்களை உடன் வைத்திருக்கிறோம். அதனால் இதை செய்ய முடிகிறது
ஒருவேளை இதில் ஏதேனும் குறை இருந்தாலும் வருமான வரித்துறை அது சம்பந்தமாக மெயில் வழியாக நோட்டீஸ் அனுப்பும். அந்த நோட்டீஸ்க்கு பதில் அளிப்பதன் மூலம் எளிதாக சரி செய்து விடலாம். அந்த பதில் அவர்களுக்கு திருப்தி இல்லை என்றால் மீண்டும் நோட்டீஸ் மீண்டும் பதில் என்று எத்தனை முறை வேண்டுமென்றாலும் பதில் சொல்லலாம். ஆனால் பெரும்பாலும் நாங்கள் பதியும்போது அவ்வாறு நோட்டீஸ் வருவதற்கான எந்த வாய்ப்புகளையும் கொடுக்காமல் சரியாக பதிவு செய்து விடுவோம் என்பதால் இதில் எந்தவித குழப்பமும் பிரச்சனையும் இல்லை. இதற்காக தனியாக கட்டணம் நாங்கள் வசூலிக்க போவதுமில்லை.
ஆகவே வருமானவரி தாக்கல் செய்தவுடன் எங்களது பணி முடிந்துவிட்டது என்று எங்கள் வாடிக்கையாளர்களை  விட்டு விலகுவதுமில்லை அவர்களை கைவிடுவதுமில்லை. அவர்கள் தொடர்ந்து எங்களுடன் காலாகாலத்திற்கும் பயணிக்க வேண்டும் என்று விரும்புகிறோம்.
இந்த கூகிள் பாரத்தில் பதிவு செய்தால் எங்கள் குழுவினர் தொடர்பு கொண்டு உதவி செய்வார்கள்  
https://forms.gle/ib2NKLiteAY9nsMRA

கருத்துகள் இல்லை: