செவ்வாய், 20 ஜூலை, 2021

பாடகி கல்பனாவின் மகளுக்குப் பாலியல் கொடுமை .. பாதிரியார் இன்னும் கைதுசெய்ப்படவில்லை ஏன்?

May be an image of 2 people and people standing

 Priya Perumal  : பிரபல பாடகி கல்பனா திடீரென்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இருந்து விலக்கப்பட்டார் அல்லது விலகிக்கொண்டார்.
கல்பனாவிற்கு கணவர் கிடையாது.  அதனால் தான் தங்கச்சியிடம் தான்... தன் மகளை ஒப்படைத்திருந்தார்.  ஏனென்றால் கல்பனா வாழ்வது ஹைதராபாத்தில்.
கல்பனாவின் குடும்பம் பிராமண பின்னணியில் இருந்தாலும் இவர்கள் 10 ஆண்டுகளுக்கு முன்பே கிறிஸ்தவ மதத்திற்கு மாறி விட்டனர்.
அவரின் தங்கச்சியின் பெயர் பிரசன்னா.  இவரும் கிறிஸ்துவ மதத்துக்கு மாறி கிறிஸ்தவரை திருமணம் செய்திருந்தார்.  ஆனால் அவருக்கு குழந்தை கிடையாது. இவரும் பாடகி தான் ஆனால் வேறு பெயரில் பாடுகிறார்.
 இவர் தமிழ் படங்களில் பாடுவதில்லை கிறிஸ்தவ ஆலயங்களிலும் மற்றும் ஆங்கில ஆல்பங்களில் பாடிக் கொண்டுதான் இருக்கிறார்.
அவ்வப்போது தன் மகளை காணவரும் கல்பனா சென்ற முறை மகளை பார்த்த போது கொஞ்சம் அரண்டு விட்டார். 


 ஏனென்றால் உடல் முழுக்க நகக்கீறல்கள் மற்றும் மனரீதியாக உடைந்த மகளை  கண்டு அதிர்ச்சி அடைந்தார் கல்பனா.
மருத்துவரின் துணை கொண்டு மன ரீதியாக அவருக்கு ஆலோசனை வழங்கி பின்பு அவர்கள் கண்டறிந்தது என்னவென்றால் பல மாதங்களாக தன் மகள் பல பேரால் சீரழிக்கப்பட்ட  அதிர்ச்சி உண்மை தெரிய வந்தது.
கொடுமை என்னவென்றால்  கல்பனாவின் தங்கச்சியை இந்த பாலியல் கொடுமைக்கு துணை போனது தான்.  
தன் கணவர் மற்றும் அவர்களின் நண்பர்கள் மற்றும் நண்பர்களின் நண்பரான பாதிரியார் இப்படி லிஸ்டு நீண்டு கொண்டே போகிறது.
இது நடந்து இரண்டு மூன்று மாதங்கள் ஆகிவிட்டது.  ஆனால் ஒரு ஊடகமும் இதை பற்றி விவாதிக்க வில்லை, அந்த பாதிரியாரும் கைதாகவில்லை....
வெட்கம்...

  விகடன் - எஸ்.மகேஷ் :  பிரபல பாடகி ஒருவரின் மகள், உறவினர் வீட்டில் தங்கியிருந்தபோது அவருக்கு பாதிரியார் மற்றும் உறவினர்களால் பாலியல் தொல்லை கொடுக்கப்பட்டதாக காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டிருக்கிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த, பிரபல பின்னணி பாடகி, தன்னுடைய 15 வயது மகளை சென்னை கீழ்ப்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியிலுள்ள தங்கையின் வீட்டில் பாதுகாப்புக்காக விட்டுவிட்டு வேலைக்குச் சென்றிருந்தார்.
இந்தச் சூழலில் 15 வயது சிறுமி, தன்னுடைய அம்மாவிடம் தனியாக இருந்தபோது நடந்த கொடுமைகளைக் கூறி கதறி அழுதார். அதைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பாடகி, என்ன நடந்தது என்று தங்கையிடம் கேட்டார்.

ஆனால் அவர் சரியான பதிலளிக்கவில்லை. இதையடுத்து ஆத்திரமடைந்த பாடகி, மகளை அழைத்துக்கொண்டு கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்றார். இன்ஸ்பெக்டர் அமுதவள்ளியைச் சந்தித்து மகளுக்கு நேர்ந்த கொடுமைகளைக் கூறினார். இதையடுத்து போலீஸாரும் பாடகியின் மகளிடம் என்ன நடந்தது என்று விசாரித்தனர். அப்போது அவர், தன்னுடைய உறவினர்கள் கீழ்ப்பாக்கத்திலுள்ள சர்ச்சுக்கு அழைத்துச் சென்றனர். அங்கிருந்த பாதிரியார், தனக்குப் பாலியல் தொல்லை கொடுத்தார். அதை உறவினர்களிடம் கூறியபோது அவர்கள் எதையும் கண்டுகொள்ளவில்லை. அதனால்தான் அம்மாவிடம் விவரத்தைக் கூறினேன் என்று கண்ணீர்மல்கத் தெரிவித்திருக்கிறார்.

இதையடுத்து பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்பட்ட புகாரின்பேரில் பாதிரியார், பாடகியின் தங்கை கணவர், பாடகியின் தங்கை, உறவினர் ஆகிய நான்கு பேர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்திருக்கின்றனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரணை நடத்தத் திட்டமிட்டிருக்கின்றனர்.

இது குறித்து போலீஸார் கூறுகையில், ``நடிகர் விக்ரம் பிரபு நடித்த படத்தில் பிரபல பாடகி பாடியிருக்கிறார். அவரின் மகளை சாலிகிராமத்திலுள்ள தங்கை வீட்டில் விட்டுவிட்டு பாடகி வேலைக்குச் சென்றிருக்கிறார்.

வீட்டில் தனியாக இருந்த சிறுமியிடம் தங்கையின் உறவினர் மகன் அன்பாகப் பேசியிருக்கிறார். அதன் பிறகு அவர் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்திருக்கிறார். அடுத்து உறவினர் குடும்பத்தினருக்குத் தெரிந்த பாதிரியாரும் சிறுமியிடம் அநாகரிகமாக நடந்திருக்கிறார். சிறுமி அளித்த தகவலின்படி நான்கு பேரிடமும் விசாரணை நடத்தவிருக்கிறோம்" என்றனர்.

பாடகியின் மகளுக்குப் பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் மதபோதகர் மற்றும் உறவினர்கள் சிக்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

கருத்துகள் இல்லை: