வெள்ளி, 13 மார்ச், 2020

ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் இருந்தால் தொழில்நுட்பத்தைப் பற்றிய கவலை தேவையில்லை!

Karthikeyan Fastura : உங்களிடம் ஒரு புதுமையான ஸ்டார்ட்-அப் ஐடியா இருக்கிறது. முதலில் நீங்கள் சில pre-production வேலைகளை செய்ய
வேண்டும்.
1. மார்க்கெட்டில் ஏற்கனவே அந்த ஐடியா இருக்கிறதா என்று பார்க்கவேண்டும். 90% உங்கள் ஐடியா ஏதோ ஒரு வடிவத்தில் சந்தையில் இருப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அதற்காக தளர்ந்து விட வேண்டியதில்லை. அதைவிட எப்படி சிறப்பாக, விரைவாக, எளிதாக, விலை குறைவாக கொடுக்க முடியும் என்று யோசித்தால் போதும்
2. இப்பொழுது உங்கள் ஐடியாவின் மார்க்கெட் சைஸ் என்ன என்பதை பார்க்க வேண்டும். எவ்வளவுக்கெவ்வளவு எல்லோருக்கும் தேவைப்படும் ஒரு பொருளாகவோ சேவையாகவோ இருக்கும்போதுதான் மார்க்கெட் சைஸ் மிகப்பெரிதாக இருக்கும்
3. உங்கள் ஐடியாவில் நிறைகுறைகளை எந்த சமரசமும் இல்லாமல் பட்டியலிட வேண்டும். உங்கள் ஐடியாவுடன் ஏமோஷனல் அட்டச்மெண்ட் இருக்கக்கூடாது.
4. உங்கள் ஐடியாவை சோதிக்க ஒரு பெர்ஷனா-வை தேர்ந்தெடுக்க வேண்டும். அதாவது அவர்தான் பயனாளி. அவரிடம் உங்கள் ஐடியாவை சொல்லி, அல்லது வரைபடத்தை வைத்து விலக்கி இப்படி ஒரு பொருள் இருந்தால் உங்களுக்கு எளிதாக இருக்குமா நீங்கள் அதை வாங்குவீர்களா என்று திரும்பத் திரும்ப கேட்க வேண்டும் . ஒவ்வொரு கட்டத்திலும் அவரிடம் சென்று உங்கள் ஐடியாவை கொடுத்து சோதித்து அதில் அவர் சந்திக்கும் நிறை குறைகளை கேட்டு அறிய வேண்டும்

5. உங்கள் ஐடியாவை ஒரு முழு வரைபடமாக உங்களுக்கு புரியும் வகையில் வரைந்து வைத்துக் கொள்ளுங்கள். அல்லது ஒரு மைண்ட் மேப் உருவாக்கி வைத்துக் கொள்ளுங்கள். இதற்கென இலவச இணையதளங்கள் நிறைய இருக்கின்றன.
சரி எல்லாம் செய்தாயிற்று. இப்பொழுது நீங்கள் உங்கள் பொருளுக்கான மார்க்கெட்டிங் வேலைகளை செய்ய ஆரம்பிக்க வேண்டும். பொருள் தயாராகவில்லை அதற்குள் மார்க்கெட்டிங் செய்ய வேண்டுமா என்றால் நிச்சயம் அப்படி செய்யும்போது தான் வெற்றி என்பது எளிதாகும். பல தவறுகளை முன்னமே செய்து பாடம் கற்றுக்கொள்ளலாம். சந்தையை புரிந்து கொள்ளலாம்.
மார்க்கெட்டிங் எங்கு தொடங்குவது ?
சமூக வலைதளம் மூலம் தொடங்கலாம். ஆனால் அதில்
நம்பகத்தன்மை உருவாக்க முதலில் நீங்கள் ஒரு இணையதளத்தை உருவாக்க வேண்டும். அந்த இணையதளத்தில் உங்களுடைய ஐடியாவை சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் அந்த ஐடியாவிற்கான மக்களின் பிரச்சனையை கூறி அதற்கான தீர்வுகளாக உங்கள் ஐடியா எப்படி விளங்கப் போகிறது என்பதை பற்றி பேச வேண்டும்.
அதாவது உங்கள் இணையதளம் ஒரு திரைப்படத்திற்கான மோசன் பிச்சர் போல, டீசர் போல இருக்க வேண்டும். அந்த தளத்தில் ஆர்வமுள்ள கஸ்டமர்களை இணைக்க ஒரு சப்ஸ்கிரிபர் பாரம் இருக்க வேண்டும்.
உங்கள் ஐடியாவானது பொருள் அல்லது சேவையாக உருவாகும் ஒவ்வொரு கட்டத்திலும் நீங்கள் உங்கள் இணையதளத்தை அப்டேட் செய்து கொண்டே வர வேண்டும். இன்னும் சில தினங்களில் உங்களது ஐடியாவானது மக்களுக்கு வெளியிடப்படவுள்ளது எனும்போது அதைப்பற்றிய ஒரு கவுண்டவுன் ஸ்டார்ட் செய்து ஓட விடவேண்டும்.
இந்த சமயங்களில் எல்லாம் உங்களது சமூக வலைத்தளத்திலும் இதைப்பற்றிய ஒரு அறிமுகத்தை ஏற்படுத்திக் கொண்டே வரவேண்டும்.
கடந்த ஒரு வருடம் மட்டும் நாங்கள் 6 ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுக்கு இணையதளமும், மொபைல் ஆப் செய்து கொடுத்து வந்திருக்கிறோம். எங்களது இலக்கு பெரிய நிறுவனங்கள் அல்ல. புதியவர்கள், இளைஞர்கள், முதல் தலைமுறை தொழில்முனைவோர்கள் தான். மிக Nominal Pricingல் இதை செய்து கொடுத்திருக்கிறோம். உங்களிடம் அப்படியான ஒரு ஸ்டார்ட்-அப் ஐடியாக்கள் இருந்தால் தொழில்நுட்பத்தைப் பற்றி எந்த கவலையும் வேண்டாம். அதை எங்களிடம் விட்டு விடுங்கள். வடிவமைப்பிலும் தரத்திலும் உயர்தரமான தளத்தை உருவாக்க வேண்டியது எங்கள் பொறுப்பு. +91-9036782332 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது karthikeyan@fastura.com என்ற இமெயிலில் தொடர்பு கொள்ளுங்கள்.

கருத்துகள் இல்லை: