வெள்ளி, 13 மார்ச், 2020

கவுண்டமணி கேட்பது போன்று, அந்த வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்!!!???

Kalai Selvi : கவுண்டமணி கேட்பது போன்று,
அந்த வார்த்தையை அவர் எப்படி சொல்லலாம்!!!???
அரசியல்னா என்னான்னு தெரியுமா!!!???
வட ஆற்காடு மாவட்டத்தில நிலச்சுவான்தார் மகனா பிறந்த நடேசன் முதலியார் டாக்டருக்கு படிச்சிட்டு, சென்னைக்கு வந்தா.....
கல்லூரி, மருத்துவமனை, நீதிமன்றம், அரசியல்னு எல்லா இடத்திலையும் ஒரு குறிப்பிட்ட இனம் மட்டுமே ஒக்காந்துக்கிட்டு ஆதிக்கம் பன்றதை சகிச்சுக்க முடியாம,
நம்ம பசங்களயும் படிக்க வப்போன்னு, எல்லாரும் வாங்க, படிங்கன்னு விடுதிய கட்டி... பொறவு பார்ப்பனர்கள் இல்லாதவிங்க சங்கம்னு உருவாக்கி, அதை தென்னிந்திய நல உரிமை சங்கம்னு மாத்தி...
டாக்டர் மாதவன் நாயரையும், கபாலீசுவரர் கோவிலில் அவமானப்பட்ட பணக்காரர் தியாகராயரையும் சேத்துக்குட்டு Justice partyன்னு தொடங்கி அதை நீதிக்கட்சியா மாத்தி, சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு,
உடம்பு சரியில்லாம இருந்தப்பவும் நம்ம பயலுவலோட எதிர்காலம் முக்கியமுன்னு, இங்கிலாந்து பாராளுமன்றத்துக்கே போயி சாதிவாரி பிரநிதித்துவம் (Proportionate Representation) வேணும்னு கேட்டு, அங்கேயே டாக்டர் மாதவன் நாயர் தன் உயிரை விட்டு...
மான்டேக் - செம்ஸ்ஃபோர்ட் கொடுத்த Quashi Federalஐ பயன்படுத்தி தேர்தல்ல நின்னு ஆட்சியை புடிச்சு...
19,000 ஆரம்ப பள்ளிகளை திறந்து, மதிய உணவு போட்டு, எல்லாரையும் படிக்க வச்சு, அரசு வேலை வாங்கி கொடுத்து..
சமஸ்கிருதத்தை நீக்கி, நிறைய பேர மருத்துவம் படிக்க வச்சு...
கோயில்ல நடந்த அக்கிரமங்களயும், கோயில் சொத்துகளை திருடனதையும் அடக்க இந்து அறநிலையத் துறைய ஆரம்பிச்சு...
மக்கள திருத்த சுயமரியாதை இயக்கம் ஆரம்பிச்சு, ஊர் ஊரா போயி செருப்பு, சாணி, மலத்தால அடி வாங்கி....

பறையர்களையும், நாடார்களையும் வைக்கம் சிவன் கோவில் வீதிக்குள்ள விடமாட்டோம்னு சொன்ன, தன் குடும்ப நண்பர் திருவிதாங்கூர் மஹாராஜாவை எதுத்து சிறைக்கு போயி....
பறையர்களையும், நாடார்களையும் மீனாட்சி அம்மன் கோயிலுக்குள்ள கூட்டிட்டு போனதால சிறைக்கு போயி...
தனி தமிழ்நாடு கேட்டு லாகூர்லேர்ந்து இங்கிலாந்து போறப்போ விமான விபத்துல தளபதி பன்னீர்செல்வத்தை இழந்து....
நீதிக்கட்சி ஆரம்பிச்ச பள்ளிகல்ல 3000 பள்ளிகள மூடி, இந்திய திணிச்ச ராஜகோபால் என்ற ராஜாஜிய எதுத்து 2 வருடம் சிறையில இருந்து...
நீதிக்கட்சிய திராவிட கழகமாக்கி,
1949ல்ல திராவிட முன்னேற்றக் கழகத்தினை ஆரம்பிச்சு...
குல்கல்வி என்ற பேர்ல 6000 பள்ளிக்கூடங்கள மூடுன ராஜகோபால் என்ற ராஜாஜிய பதவிய விட்டு தூக்கி...
காமராஜர முதலமைச்சராக்கி... ராஜாஜி மூடுன பள்ளிகளை திறக்க வச்சு, மேலும் சிவந்தான்பட்டி உட்பட பல கிராமங்கள்ள பள்ளிகளை திறக்க வச்சு... எல்லா பள்ளிகளிலையும் மதிய உணவு போட்டு... எல்லா தரப்பு புள்ளைங்களையும் படிக்க வச்சு, வேலைக்கு அனுப்பி...
1957ல்ல போட்டி போட்டு, 15 சமுஉக்களை பெற்று, 1959ல சென்னை மாநகராட்சி தேர்தல்ல 49 கவுன்சிலர்களை வெற்றி பெறச் செய்து மாநகராட்சி மேயராகி, 1962ல 50 சமுஉக்களை பெற்று, 1965ல இந்திய எதுத்த 1000 இளைஞர்கள காமராஜர், கக்கன் துப்பாக்கிகளுக்கு பலிகொடுத்து, 1967ல்ல ஆட்சிய புடிச்சு, திராவிட கொள்கைளை சட்டமாக்கி, 1971ல 183 சமுஉக்களை பெற்று.
ஒன்றியத்தின் எமர்ஜென்சியை எதுத்து, ஆட்சிய பறிகொடுத்து...
ராமச்சந்திரன வச்சு RSS, கட்சிய ஒடச்சப்பவும் கட்சிய காப்பாத்தி 1989ல மீண்டும் ஆட்சிய புடிச்சு... ஜெயலலிதா, சுப்பிரமணியம் சாமி சதியால மீண்டும் ஆட்சிய பறிகொடுத்து...
வைகோ கட்சிய ஒடச்சப்பவும், கட்சிய காப்பாத்தி 1996ல மீண்டும் ஆட்சிய புடிச்சு...
இதை தடுக்க RSS, இப்ப விஜயகாந்த உருவாக்கி, 10% வாக்குகள வாங்க வச்சப்பவும் மீண்டும் ஆட்சியை புடிச்சு...
காங்கிரஸுக்கு பங்கு கொடுக்காம, 5 ஆண்டுகளும் ஆட்சி செய்து...
எந்த ஈழத்துக்காக ஒழைச்சமோ, அந்த இயக்கத்தாலேயே கொலைப்பழி சுமந்து...
தலைவரை இழந்து பொழுதும் கட்சிய கட்டுக் கோப்பா வச்சு,
இந்திய ஒன்றியத்துக்கே சவால் விடும் அளவுக்கு வளந்து இருக்கோமே.....
இதுதான் அரசியல்.
என்னடான்னா ஒருத்தன் 5 மாவடத்துல இருக்குற சாதிக்காரைங்கள வச்சுகிட்டு முதலமைச்சர்ங்கிறான்..
படத்தில போனி ஆகலேன்னதும், புதுக் கட்சிக்கே தலைவராகி நாந்தான் முதலமைச்சர்ஙாகிறானுவ....
ஒருத்தன் புலம்பெயர்ந்த ஈழ மக்கள்ட்ட பணத்தை பிடுங்கி, தமிழ்நாட்டுல முதலமைச்சராகுவேங்கரான்...
இன்னும் சில பயலுவ அம்பேத்கர வச்சுகிட்டு நான்தான் முதலமைச்சர்ங்கிறானுவ....
அரசியல்னா, கே.எஸ். ரவிக்குமார் எடுக்குற படத்துல, வைரமுத்து எழுதுர பாட்டுக்கு வாயை அசைக்கிறது நினைச்சியா......
இது அரசியல்டா!!!

கருத்துகள் இல்லை: