

ராஜினாமா செய்ய வேண்டும். அதே நேரம் ஜரோப்பா நாடாக இந்தியா இருந்திருந்தால் மோடி பிரதமராக நீடிக்க வாய்ப்பு இல்லை. நான் தீவிரமான ஆர் எஸ் எஸ் அமைப்பின் ஆதரவு பெற்ற நபராக இதை சொல்வதில் எனக்கு எந்த தயக்கமும் ஒரு போதும் இல்லை..
மோடி நாட்டை பின்னோக்கி கொண்டு சென்று விட்டார். அரசுக்கு இந்த நடவடிக்கை மூலம் 2.20 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு நஷ்டம் ஏற்பட்டது. அதை தாண்டி 5.3 என்ற அளவில் வளர்ச்சி விகிதம் பின்னடைவு ஏற்பட்டது. இதற்கெல்லாம் காரணம் மோடி மற்றும் தான் காரணம் ஆவார்.
ராமசுப்பரமணியன்.. ..
ஆர்எஸ்எஸ் தன் சீடர்களை விட்டு பேசவைக்கிறது.. மோடியை பழிக்கொடுத்தேனும் அதிகாரத்தை தன்பிடியில் இருந்து நழுவ விடகூடாதென்று நினைக்கிறது மோடியின் பெயரைச் சொன்னால் அடிபலமாக விழுமென வரும் செய்திகளால் வேறொருவரை நிறுத்தலாமா என யோசிப்பதாக அரசியல் ஆய்வர்கள் கருதுகிறார்கள்..
மிகப்பெரிய பொருளாதார பின்னடைவை சந்திக்கும் இந்தியாவில் தன்னாட்சி அதிகாரம் பெற்ற ரிசர்வ் வங்கியை தன் கட்டுபாட்டிற்குள் கொண்டுவர நாடாளுமன்றத்தில் தீர்மானம் கொண்டுவருகிறது பாஜக அரசு .. நாடு பார்பனர்களின் கையில் சென்றவுடன் என்னென்ன சீரழிவுகள் ..பெரியார் சொன்னதைப்போல தன்னை ரொம்ப படித்தவனாக காட்டிக்கொள்கிறான் ஆனால் உண்மையில் அவன் அறிவாளியெல்லாம் இல்லை நமக்கு வாய்ப்பை தராமல் அவனே எல்லா பொறுப்புகளிலும் இருப்பதால் நாம் அப்படி எண்ணிக்கொள்கிறோம்..
..
ரஃபேல் போர் விமானங்கள் வாங்கியதில் உச்ச நீதிமன்றத்தில் அரசு அளித்துள்ள அறிக்கையில் விமானங்கள் விலை குறித்து முரணான தகவல்கள் காணப்படுகின்றன. எனவே மத்திய அரசு உண்மையை மறைத்து பொய்யா தகவல் அளிக்க கூடாது. எனவே புதிய அறிக்கை அளிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவு ..
உச்சநீதிமன்றத்திலேயே அரசு பொய்யான தகவலை தருகிறதென்றால் மக்களுக்கு உண்மையான செய்தியை சொல்லுமா என்ன.. பொய்யை மட்டுமே நம்பி இத்தனைகாலம் ஆட்சி செய்கிறார்கள் என்றால் தவறு நம் மீதுதானே தவிர அவர்கள் மீதல்ல .. போட்டாஷாப்பிற்கும்
உரக்க கத்தி பேசுவதையும் நம்புகிற நிலை இருக்குவரை .. பொய்யாக பேசினால் ஏன் தவறான தகவலை தருகிறீர்கள் என ஊடகங்கள் கேட்காதவரை வரை .. பணத்திற்காக ஊடகவியலாளர்கள் நேர்மையின்றி அதிகபடியாக ஒருவரை புகழ்ந்து .. தகுதிக்குமீறியவரை அதிகாரத்தில் அமர்த்த மக்களிடையே ஒருவித மாயபிம்பத்தை ஏற்படுத்தி உயர்த்திபிடிப்பதை நிறுத்தாத வரை..
ஏன் எப்படி எதற்காக இவரை ஆதரிக்கவேண்டும் இதுவரை இவன் ஆற்றிய பணி என்ன என்றெல்லாம் நாம் அலசி ஆராயாதவரை .. மோடிக்களும் ஜெயாக்களும் பழநிசாமிகளும் மட்டுமே நமக்கு கிடைப்பார்கள் .. யார் எதைச் சொன்னாலும் நம்பிவிடுகிற நிலையிலிருந்து நாம் எப்போது வெளிவர போகிறோமே அப்போதே இந்த நாடு சீரான வளர்ச்சியில் செல்லும் .. பொய்யர்களும் கொள்ளையடித்தவர்களையும் நாம் கொண்டுகிற நிலை மாறுகிறவரை நமக்கு மோடிகளே கிடைப்பார்கள்..
..
ஆலஞ்சியார்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக