ஞாயிறு, 29 ஜனவரி, 2017

காவிரி 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை,,...மத்திய மாநில அரசுகளின் அயோக்கியத்தனம்


rajakumaran-farmerthetimestamil.com ;இதுவரை காவிரிக் கரையிலே 220க்கும் அதிகமான விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். நெல்மணிகள் பால் பிடிக்கும் பருவத்திலே தண்ணீர் நின்று விட்டது, கடை மடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை, பயிர்கள் கருகியது… சாகும் பயிர்களைக் காணச் சகிக்காமல் விவசாயிகள் மாரடைப்பாலும், களைக்கொல்லிகளைக் குடித்தும் உயிரை விடுகின்றனர்.. மணற்கொள்ளையால் நிலத்தடி நீரும் இல்லாமல் ஆகி விட்டது.. விவசாயிகளின் மாடுகள் இன்று வயலை மேய்ந்து வருகின்றன…
தமிழகம் சந்திக்கக் கூடாத கொடூரம் இது….
1. மத்திய அரசின் கயவாளித்தானத்தாலும்
2. ஆட்சி புரிந்த மாநில அரசுகளின் அயோக்கியத்தனத்தாலும்
3.  தமிழக அ.தி.மு.க, தி.முக அரசுகளின் மணற்கொள்ளையாலும்..
4. எம்.எஸ்.சுவாமிநாதன், சி.சுப்ரமணியன் உருவாக்கிய பசுமைப் புரட்சியின் வன்முறையாலும்…
5. அதிக அளவு செயற்கை உரங்களினால் அதிக தண்ணீர் தேவையினால் காவிரியின் தண்ணீர் பயன்பாடு ஒவ்வொரு வருடமும் அதிகமாகி வந்ததாலும்….
6. கர்நாடக அரசின் துரோகத்தாலும்…
7. மோடியின் பணமதிப்பிழப்பு நாடகத்தாலும்,
இன்று இக்கொலைகள் தொடர்கின்றன…
தயாரிப்பு: பூவுலகின் நண்பர்கள், தமிழ் நாடு புதுச்சேரி

கருத்துகள் இல்லை: