சனி, 18 ஜூன், 2016

குஜராத் ,,அத்தனை படுகொலைகளையும் 12 பேர் மட்டும்தான் செய்தார்களா?”தீர்ப்பு குறித்து ஜாக்கியா ஜஃப்ரி

2002ஆம் ஆண்டு பிப்ரவரி 28ஆம் தேதி, குஜராத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசித்த குல்பர்க் சொஸைட்டிக்குள் புகுந்த வன்முறை கும்பல், அந்தக் குடியிருப்பை தீயிட்டு பொசுக்கியது. காங்கிரஸ் எம்பி இஸான் ஜஃப்ரி உள்ளிட்ட 69 பேர் மிகக் கொடூரமான முறையில் கொல்லப்பட்டார்கள். கடந்த 14 ஆண்டுகளாக சிறப்பு நீதிமன்றத்தில் நடந்துவந்த இந்த வழக்கில் இந்த மாதம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இன்று தண்டனை விவரங்கள் அறிவிக்கப்பட்டன.
“இந்த படுகொலைகள் திட்டமிட்டு நடத்தப்படவில்லை” என்று அறிவித்தார் நீதிபதி பி. பீ. தேசாய். இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட 64 பேரில் இந்தப் படுகொலையை தலைமையேற்று நடத்தியதாகச் சொல்லப்பட்ட பாஜக கவுன்சிலர் பிபின் படேல் உள்ளிட்ட 36 பேரை நீதிபதி விடுவித்தார்.

மீதமிருந்தவர்களில் இருவர் வழக்கு நடந்துகொண்டிருந்தபோதே இறந்துவிட்டனர். ஒருவரை காணவில்லை. இந்நிலையில் இந்த வழக்கின் குற்றவாளிகளாக 24பேர் அறிவிக்கப்பட்டு அவர்களுக்கு 7லிருந்து 12 ஆண்டுகள் வரை தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்த தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள இஸான் ஜஃப்ரியின் மனைவி, “அத்தனை பேரைக் கொன்ற குற்றத்துக்கு 12 பேருக்கு மட்டும் தண்டனையா? இதை எதிர்த்து நான் போராடுவேன்” என தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கில் நீதிக்காகப் போராடிவரும் செயற்பாட்டாளரான தீஸ்தா செடல்வாட், ‘7 ஆண்டு தண்டனை என்பது குறைந்தபட்ச தண்டனை. இதை எதிர்த்து வழக்குக் தொடருவோம்” என  கூறியுள்ளார்.  thetimestamil.com

கருத்துகள் இல்லை: