அவருடைய இந்த நிலைக்கு யார் காரணம்? அவர் நடித்து கடைசியாக வெளியான படம்
போடாபோடி. அதற்குப் பிறகு வரவேண்டிய வாலு இன்னும் வந்தபாடில்லை. வாலு
படத்தைத் தயாரிக்கும் நிக்ஆர்ட்ஸ் நிறுவனத்திலேயே வேட்டைமன்னன் என்று
இன்னொருபடம் செய்வதாக இருந்தது. அதையும் ஒழுங்காக எடுக்கவில்லை. வாலு
படத்தை எடுத்து முடிக்கவே தயாரிப்பாளர் நிறையச் சிரமப்பட்டதாகச்
சொல்லப்பட்டது. தயாரிப்பாளரிடம் பணம் இல்லாதததால் வாலு தாமதமாவதாகச்
சொல்லப்பட்டது.
இதனால் சொந்தநிறுவனத்திலேயே பாண்டிராஜை இயக்குநராக்கி இதுநம்மஆளு என்கிற
படத்தைத் தொடங்கினார்கள். அந்தப்படத்தையாவது வேகமாக முடித்தார்களா என்றால்
இல்லை.
மற்றவர்கள் படத்துக்கு ஒரு நீதி தன் படத்துக்கு ஒரு நீதி என்று வைத்துக்கொள்ளாமல் இந்தப்படத்தையும் சிம்பு இழுத்தடித்துக்கொண்டிருக்கிறார் என்று சொல்லப்படுகிறது. எந்தப்படத்தின் படப்பிடிப்பு என்றாலும் சரியான நேரத்துக்கு அவர் சென்றதாக இதுவரை செய்திகள் இல்லை. முந்தினநாள் கடுமையான நடனஅசைவுகள் செய்துவிட்டுப் போய்ப்படுத்தால் அடுத்தநாள் காலை எழுவதற்கே கஷ்டமாக இருக்கும் அதைப் புரிந்துகொள்ளாமல் படப்பிடிப்புக்குச் சரியாக வருவதில்லை என்று சொல்கிறார்கள் என்று ஒருமுறை சொன்னார் சிம்பு. ரஜினி, விஜய் உட்பட முன்னணிநடிகர்கள் அனைவருக்கும் இதே சிக்கல் இருந்தாலும் அவர்களைப் பற்றியெல்லாம் இப்படிச் செய்திகள் வராமல் சிம்புவைப் பற்றி மட்டுமே வருகிறது. அதற்குக் காரணம், அவர்கள் எல்போதாவது படப்பிடிப்புக்குத் தாமதமாக வருவார்கள். ஆனால் சிம்புவோ எப்போதாவதுதான் சரியாக வருவார் என்பது எல்லோருக்கும் தெரிந்த தகவலாக இருக்கிறது.
பாண்டிராஜ் இதுவரை இயக்கிய எல்லாப்படங்களுமே திட்டமிட்டபடி முடிந்துவிடும். மூன்று அல்லது நான்கு மாதங்களுக்குள் மொத்த வேலைகளையும் முடித்துவிடுவார். ஆனால் அவராலேயே இதுநம்மஆளு படத்தைத் திட்டமிட்டபடி முடிக்கமுடியவில்லை. அதற்குக்காரணம் சிம்புதான் என்பது சொல்லித் தெரியவேண்டியதில்லை.
எல்லாப்படமுமே நல்லபடமா வரணும்முன்னுதான் உழைக்கிறோம், சிலது நல்லபடமா அமையுது சிலது நல்ல பாடமா அமையுது, சிலது ஏடாகூடமா அமையுது எதுவுமே அமையணும் என்றும், மார்ச் 29 ஆம் தேதியன்று, கேடிபில்லாகில்லாடிரங்கா படம் வெளியிட்டு 2 ஆண்டுகள் ஆகின்றன. நூறுநாள் படத்தைக் கொடுத்தும் இரண்டுஆண்டுகளில் அடுத்தபடம் வரவில்லை எல்லோருக்கும் இதற்கான காரணம் எல்லோருக்கும் தெரியும். எதுவும் என் கையில் இல்லை என்று பாண்டிராஜ் சொல்லியிருந்தார்.
இவற்றை வைத்துப் பார்க்கும்போது சிம்புவுக்குப் பணமும் படமும் போனதற்குக் காரணம், அவர் மட்டுமே தான் காரணம், வேறு யாரும் இவ்லை என்று திரையுலகினர் சொல்கிறார்கள் vikatan.com

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக