திங்கள், 8 செப்டம்பர், 2014

ஸ்டாலினுடன் 17 மாவட்ட செயலாளர்கள் கலைஞருக்கு எதிராக கோரிக்கை ? தா.மோ.அன்பரசன் ராஜினாமா கடிதம்?

தி.மு.க., தலைமை பொறுப்பை, ஸ்டாலினுக்கு வழங்க வேண்டும். அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும்' என, அந்தக் கட்சியின், 17 மாவட்ட செயலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதை வலியுறுத்தி, ராஜினாமா செய்யவும் தயாராகி வருகின்றனர்.இதுதொடர்பாக, தி.மு.க., வட்டாரங்கள் கூறியதாவது:
தி.மு.க.,வில், அடுத்த தலைவர் யார் என்ற சர்ச்சை நீடிக்கிறது. உட்கட்சி தேர்தல் முடிந்ததும், கட்சியின் தலைமை பொறுப்பை, மீண்டும் கருணாநிதி ஏற்பாரா அல்லது ஸ்டாலினுக்கு அந்தப் பதவியை தாரை வார்த்து கொடுப்பாரா என்ற கேள்வி, ஸ்டாலின் ஆதரவாளர் கள் மத்தியில் எழுந்துள்ளது. அவர்களின் கேள்விகளுக்கு விடை தேடிக் கொடுக்கும் வகையில், ஸ்டாலின் குடும்பத்தினர், ஒரு குழுவாக செயல்பட்டு வருகின்றனர். மொத்தத்திலே புரட்சி தலைவிதாய்ன் வாழ்நாள் முதலமைச்சர்ன்னு ஸ்டாலின் gang முடிவு பண்ணிட்டாய்ங்க , அழகிரி தொலையனும் அதாய்ன் முக்கியம் ?
இந்தக் குழுவில், ஸ்டாலின் மனைவி துர்கா, மருமகன் சபரீஷ், மகன் உதயநிதியின் மைத்துனர் கிரீஷ் ஆகியோர் உறுப்பினர்களாக உள்ளனர். சமீபத்தில், சென்னை அன்பகத்தில், தி.மு.க., இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டம் முடிந்ததும், மாலையில், ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர் ஒருவர் தலைமையில், முக்கிய ஆலோசனைக் கூட்டம் நடந்துள்ளது.மேலும், பிரதமர் மோடியின் இணையதளத்தில் பணியாற்றிய, 10 பேர் கொண்ட குழுவினர், தற்போது ஸ்டாலினின் இணைய தளத்திற்காகவும் பணிபுரியத் துவங்கியுள்ளனர். அவர்கள் அனைவரும், சென்னையில் உள்ள, முன்னாள் மத்திய அமைச்சர் ஒருவருக்கு, சொந்தமான ஓட்டலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இந்த குழுவினர் தெரிவித்த ஆலோசனைப்படி, முதல் கட்டமாக, கருணாநிதியை எதிர்த்தும், ஸ்டாலினுக்கு ஆதரவாகவும் கட்சியில் குரல் எழுப்ப, அவரின் ஆதரவாளர்கள் துவங்கியுள்ளனர். உட்கட்சி தேர்தலில், மாவட்ட செயலர்கள் சிலர், ஸ்டாலினுக்கு ஆதரவாக, தங்கள் பதவிகளை ராஜினாமா செய்தால், தி.மு.க., மீது பொதுமக்களுக்கு உள்ள அதிருப்தி நீங்கும்; நிலஅபகரிப்பு, ஊழல் புகாரில் சிக்கியவர்களை, கட்சியிலிருந்து ராஜினாமா செய்ய வைத்தால், சட்டசபை தேர்தலில், தி.மு.க.,வுக்கு ஓட்டு வங்கி அதிகரிக்கும் என, அந்த, 10 பேர் குழுவினர் யோசனை தெரிவித்துள்ளனர்.இதன் ஒரு பகுதியாக, 'ஸ்டாலினுக்கு தலைவர் பதவியை வழங்க வேண்டும்; அவரை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க வேண்டும். முன்னாள் மேற்கு வங்க முதல்வர் ஜோதிபாசுவை போல, அரசியலை விட்டு கருணாநிதி விலக வேண்டும்' என்ற கோரிக்கையை வலியுறுத்தி, 17 மாவட்ட செயலர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளனர். அதில், முதல் நபராக, காஞ்சிபுரம் மாவட்ட செயலர் தா.மோ. அன்பரசன் ராஜினாமா செய்துள்ளார் என்றும், அக்கடிதத்தை பெற்ற கருணாநிதி, 'ஆகட்டும் பார்க்கலாம்' எனக்கூறி அனுப்பியதாக தெரிகிறது.இவ்வாறு, தி.மு.க., வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆனால், காஞ்சிபுரம் மாவட்ட தி.மு.க.,வில், ஒரு முக்கிய பதவிக்கு, ஒருவரை நியமனம் செய்வதில், கருணாநிதிக்கும், தா.மோ. அன்பரசனுக்கும் கருத்து வேறுபாடு உருவாகிஉள்ளது.

எதிர் கோஷ்டி:

இருந்தாலும், ராஜினாமா கடிதம் எதையும், அன்பரசன் கொடுக்கவில்லை என, அவருக்கு எதிரான கோஷ்டியினர் கூறி வருகின்றனர்.இதற்கிடையில், 'தி.மு.க.,விலும், அதன் அறக்கட்டளையிலும் தி.மு.க., அமைப்பு செயலர் டி.கே.எஸ். இளங்கோவனுக்கு எந்த முக்கியத்துவமும் வழங்க கூடாது. அவரை கட்சியிலிருந்து நீக்க வேண்டும்' என, சிலர் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

- நமது நிருபர் - dinamalar.com

கருத்துகள் இல்லை: