செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

தாமிரபரணி-நம்பி ஆறு இணைப்பு திட்டம்: 3 ஆண்டாக கிடப்பில் போடப்பட்டது ஏன்? தமிழக அரசுக்கு ஐகோர்ட் சரமாரி கேள்வி

சென்னை உயர் நீதிமன்றத்தில் ராதாபுரம் தொகுதி முன்னாள் எம்எல்ஏ அப்பாவு தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:தாமிரபரணி -கருமேனி  ஆறு - நம்பி ஆறு இணைப்பு திட்டம் கடந்த 2009ம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி தொடங்கப்பட்டது. இந்த திட்டத்தின் மொத்த மதிப்பீடு ரூ.369 கோடியாகும். 2009ல்  ரூ.65 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2010ல் ரூ.41 கோடியும் அதற்கு அடுத்த ஆண்டு ரூ.107 கோடியும் இந்த திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டது. இத்திட்டத்தின் இரண்டு  கட்ட பணிகள் முடிவடைந்தன. அதன்படி தாமிரபரணி ஆற்றிலிருந்து மூலக்கரைப்பட்டி வரை கால்வாய் வெட்டும் பணி முடிவடைந்தது.
மூன்றாம் மற்றும் நான்காம் கட்ட பணிகளுக்காக தமிழக பட்ஜெட்டில் 2012-13ம் நிதி ஆண்டில் ரூ.100 கோடியும் 13-14ம் நிதி ஆண்டில் ரூ.156 கோடியும் 14-15ம்  ஆண்டில் ரூ.119 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் அந்த பணிகள் மேம்படுத்தப்படாமல் அப்படியே கிடப்பில் போடப்பட்டன. இதென்ன புதுசா குற்றச்சாட்டு ? திமுகவின் எல்லா திட்டங்களையும் கிடப்பில் போடுவதை அரசு கொள்கையாக வைச்சிருக்கோம்ல ? பெரிய கொலம்பஸ் கண்டுபிடிப்பு ! அப்பிடிதாய்ன் கிடப்பில் போடுவோம் நீ பண்றதை பண்ணு மக்க நம்ப கூட  ஐ அய்லசா அய்யலசா ?
இதில் 24.8 கோடி மட்டுமே  செலவிடப்பட்டது. மீதமுள்ள தொகையை பொது பணித்துறை அரசுக்கு திரும்ப அனுப்பியுள்ளது. தாமிரபரணி ஆற்றிலிருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை  வறண்ட பகுதிக்கு திருப்பி வ¤டும் இந்த திட்டத்தை செயல்படுத்துமாறு அரசுக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிசன் கவுல், நீதிபதி சத்திய நாராயணன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது. இந்த  மனுவை விசாரித்த நீதிபதிகள், “இந்த திட்டத்தின் மூன்றாம் கட்ட பணி எதற்காக நிறுத்தப்பட்டது. பணியை எப்போது மீண்டும் தொடங்குவீர்கள். எவ்வளவு  காலத்திற்குள் பணியை முடிப்பீர்கள். இத்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட நிதியை எதற்காக மீண்டும் திரும்ப அனுப்பினீர்கள். இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டதால்  ஏற்படும் கூடுதல் செலவினங்களுக்கு யார் பொறுப்பேற்பது. இதற்கு 3 வாரங்களுக்குள் பதிலளித்து அறிக்கையாக தாக்கல் செய்ய வேண்டும். இவ்வாறு  உத்தரவிட்டனர். - See more at: /tamilmurasu.org/

கருத்துகள் இல்லை: