

பல ஆங்கிலப் படங்களை தயாரித்து, இயக்கி, நடித்ததுடன் பல்வேறு திரைப்பட விழாக்களின் நடுவர்கள் குழுவிலும், விருதுகளுக்கான தேர்வுக் குழுவிலும் இடம்பெற்றிருந்தார். அவர் வெற்றிகரமான இயக்குநர் என்ற பெயரை பெறுவதற்கு முன்னர் லண்டன் திரையுலகில் சிறந்த நட்சத்திர நடிகராக திகழ்ந்தார். ஜுராசிக் பார்க் படத்தில் ஆராய்ச்சி கூடத்தின் உரிமையாளராக நடித்து இருந்தார். சுமார் 60 ஆண்டுகளாக திரையுலகில் பணியாற்றிய அனுபவம் நிறைந்த ரிச்சர்ட் அட்டென்பரோ, ஐக்கிய நாடுகள் சபையின் பல்வேறு மனிதநேய காரியங்களுக்கான நல்லெண்ணத் தூதராகவும் தொண்டாற்றியுள்ளார். இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான ‘பத்மபூஷன்’, பிரிட்டைனின் உயரிய ‘லார்ட்’ உள்ளிட்ட பல விருதுகளையும், பட்டங்களையும் பெற்ற இவர், உடல்நலக்குறைவால் தனது 90-வது வயதில் நேற்று காலமானார். அவர் வரும் 29-ம் தேதி தனது பிறந்த நாளை கொண்டாட இருந்த நிலையில் காலமானார். ரிச்சர்ட் அட்டென்பரோ இறந்த முன்னாள் இங்கிலாந்து இளவரசி டயானா மற்றும் வேல்ஸ் இளவரசருடன் நெருங்கிய நண்பர் ஆவார்.தமிழ் .இந்து ,com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக