புதன், 27 ஆகஸ்ட், 2014

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பில் 100 இந்திய இளைஞர்கள்?

புதுடில்லி: சிரியா மற்றும் ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டு, சில பகுதிகளை கைப்பற்றி, அதை, இஸ்லாமிய நாடாக அறிவித்துள்ள, அல் குவைதா ஆதரவு, ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகள், தமிழகம், கேரளா போன்ற சில மாநிலங்களில் இருந்து முஸ்லிம் இளைஞர்கள் சிலரை தங்கள் பயங்கரவாத பணிக்கு அமர்த்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.  இவர்களெல்லாம் சொர்க்கம் கிடைக்கும் என்று மூளை சலவை செய்யப்பட்டு அங்கே சண்டைபோட செல்கிறார்கள். இறந்த பிறகு, நரகம் செல்லும் பொழுது தவறை உணரபோகிரார்கள். வெளியே அமெரிக்காவிற்கு ஆதரவான அரசை கவிழ்க்க போர் புரிகிறோம் என்று கூறிவிட்டு, உள்ளே இஸ்ரேலுக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசாத இந்த தீவிரவாத அமைப்புக்காக போராட போகிறார்கள். போங்கள். ஆனால், திரும்பிமட்டும் வந்துவிடாதீர்கள்
இந்தியன் முஜாஹிதீன்' எனப்படும் இந்தியாவைச் சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தலைமறைவு நிர்வாகிகள் சிலர், இந்திய இளைஞர்கள் சிலரை, மத்திய ஆசிய நாடுகளில் செயல்படும், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாதிகளிடம் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்களில் இருந்து, நூற்றுக்கும் மேற்பட்ட முஸ்லிம் இளைஞர்கள், ஐ.எஸ்.ஐ.எஸ்., பயங்கரவாத அமைப்பில் இணைந்துள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.இந்த தகவலை, பயங்கரவாத வழக்குகளை விசாரிக்கும், தேசிய விசாரணை அமைப்பு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன  dinamalar.com

கருத்துகள் இல்லை: