
அம்மா மெட்ரோ"ன்னு பெயர் வச்சி, "விலையில்லா ரயில்" விட்டாத் தான் மம்மிக்கு புகழ்.. இல்லைன்னா இது கருணா, ஸ்டாலின் ஆரம்பிச்ச திட்டம் என்று திமுகவினர் பொய்யுரை பரப்பி வருகின்றனர் என்று உளவுத் துறை ரகசிய தகவல் அனுப்பி உள்ளது..
வண்ணாரப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் விமான நிலையம் , சென்டிரலில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை , வண்ணாரப்பேட்டையில் இருந்து சென்டிரல் வழியாக சைதாப்பேட்டை வரை சுரங்கப்பாதையிலும், சைதாப்பேட்டையில் இருந்து மீனம்பாக்கம் வரை மேம்பாலத்திலும் ரெயில்கள் ஓடும். இதற்கென பாதைகள் அமைக்கும் பணி துரிதமாக நடந்து வருகிறது.
இதே போல் மற்றொரு வழித்தடத்தில் சென்டிரலில் இருந்து திருமங்கலம் வரை சுரங்கப்பாதையிலும், திருமங்கலத்தில் இருந்து கோயம்பேடு வழியாக பரங்கிமலை வரை மேம்பாலத்திலும் ரயில்கள் இயக்கப்படும். முதற்கட்டமாக, கோயம்பேடு-ஆசர்கானா (பரங்கிமலை) இடையே அடுத்த 2015ம் ஆண்டு மத்தியில் மெட்ரோ ரயில் போக்குவரத்து முழு அளவில் துவங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜப்பான், சீனாவில் நடைமுறையில் இருக்கும் இந்த ரயில்கள் போல சென்னையிலும் அதிவேகத்துடன் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இதற்கான சோதனை ஓட்டத்தை முதல்வர் ஜெ., இன்று மதியம் துவக்கி வைத்தார்.
ஒன்றுக்கு 5 லட்சம் பேர்:
இது குறித்து, ரயில்வே அதிகாரி ஒருவர் கூறுகையில்: சென்னை பீச் - தாம்பரம் இடையே, தினமும், 230 ரயில் சர்வீஸ்களில், 2.5 லட்சம் பேரும், சென்னை பீச் - வேளச்சேரி இடையே, 134 சர்வீஸ்களில், ஒரு லட்சம் பேரும் பயணிக்கின்றனர். பயணிகள் கூட்டம் அதிகமுள்ள, காலை மற்றும் மாலை வேளைகளில், 5 நிமிட இடைவெளியிலும், மற்ற நேரங்களில் 15லிருந்து 20 நிமிட இடைவெளியில், ரயில்கள் இயக்கப்படுகின்றன. மெட்ரோ ரயில் திட்ட பணிகள் முடிந்ததும், முதல் கட்டமாக, நான்கு பெட்டிகளுடன் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மூன்றரை நிமிடங்களுக்கு ஒரு ரயில் இயக்கினால், ஒரு மணிநேரத்திற்கு, 24 ஆயிரத்து 324 பேர் பயணம் செய்யலாம். பயணிகள் பயன்படுத்த லிப்ட், எஸ்கலேட்டர் வசதிகள், அகலமான மாடிப் படிக்கட்டுகள் மற்றும் பிரமாண்டமான அளவில் வாகன நிறுத்த வசதியுடன் பரங்கிமலை நிலையம் அமைய உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். dinamalar.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக