சனி, 15 அக்டோபர், 2011

அளவுக்கதிகமான ஆஞ்சியோகிராம் சிறுநீரகத்தை பாதிக்கும்

இதயநோய் இருக்கிறதா என்பதை அறிந்து கொள்வதற்காக ஆஞ்சியோகிராம் செய்வது வழக்கம் ஆனால் அவசியமில்லாமல் அடிக்கடி ஆஞ்சியோகிராம் செய்து கொள்வது சிறுநீரகத்தை பாதிக்கும் என இருதய நோய் நிபுணர்கள் கூறியுள்ளனர். ஆஞ்சியோகிராம் செய்வதற்காக மேற்கொள்ளப்படும் நடைமுறைகளால் அதிக அளவில் கதிர்வீச்சுக்கு உள்ளாகி பல்வேறு நோய்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.இதயநோயை அறிய
திடீரென நெஞ்சை பிடித்துக்கொண்டு வலியால் துடிப்பவர்கள்
ரத்தக் குழாய்களில் உள்ள அடைப்பை கண்டறிந்து இருதய நோய் இருப்பதை உறுதிப்படுத்த செய்யப்படும் பரிசோதனையே ஆஞ்சியோகிராம் ரத்தக்குழாயில் அயோடின் கலந்த திரவத்தை செலுத்தி அது செல்லும் பாதையை எக்ஸ்ரே மூலம் படம் பிடித்து அடைப்புகள் உள்ளதா என்பதை இச்சிகிச்சை மூலம் கண்டறியலாம். ஆனால் நெஞ்சுவலியால் பாதிக்கப்படும் அனைவரும் ஆஞ்சியோகிராம் செய்துகொள்ளத் தேவையில்லை என்கின்றனர் இதயநோய் நிபுணர்கள்.

இதயத்தில் லேசாக சுருக் என்றாலே இதயகோளாறுதான் என்று அஞ்சுபவர்கள் பலர் உள்ளனர். நெஞ்சுவலிக்குக் காரணம் மாரடைப்புதான் என்று நினைத்து அதை உறுதிசெய்ய ஆஞ்சியோகிராம் செய்யக் கூறி மருத்துவர்களை வற்புறுத்துகின்றனர். ஆனால் தேவையில்லாமல் ஆஞ்சியோகிராம் செய்துகொள்வதால் நோயாளிகளின் உடல் கதிர்வீச்சு பாதிப்புக்கு உள்ளாவதோடு சிறு நீரக கோளாறுகளும் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

எளிய சிகிச்சை உண்டு

மாரடைப்பு ஏற்பட்டுள்ளதா என்பதை சில நிமிடங்களிலேயே கண்டறிய எளிய சிகிச்சை முறைகள் வந்துவிட்டன. மேலும் எதிர்காலத்தில் மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் உள்ளதா என்பதை கண்டறியவும் சாதனங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. உணவு பழக்கங்களில் ஏற்பட்டுள்ள மாற்றங்களே மாரடைப்பு நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ள நிலையிலும் வளர்ந்து வரும் சிகிச்சை முறைகளினால் மாரடைப்பால் இறக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்து சதவிகிதமாக குறைந்துள்ளது என்கின்றன சமீபத்திய ஆய்வு முடிவுகள்

கருத்துகள் இல்லை: